Published : 18 Aug 2020 08:07 PM
Last Updated : 18 Aug 2020 08:07 PM

சுற்றுச்சூழல் வனங்கள் பருவநிலை மாற்றம்: அக்டோபர் 1-ம் தேதி மண்டல அலுவலகங்கள் தொடக்கம்

புதுடெல்லி

மத்திய சுற்றுச்சூழல் வனங்கள் பருவநிலை மாற்றம் ஆகிய அமைச்சகங்கள் தொடர்பான செயல்களை ஒருங்கிணைக்க அக்டோபர் 1-ம் தேதி மண்டல அலுவலகங்கள் செயல்பட ஒப்புதுல் அளிக்கப்பட்டுள்ளது.

மாற்ற ம் ஆகிய அமைச்சகங்கள் தொடர்பான விதிமுறைகளுக்கு மேம்படுத்தப்பட்ட முறையில் உரிய காலத்தில், திறனுள்ள வகையில் ஒப்புதல் பெறுவதை கருத்தில் கொண்டும், இந்த நோக்கத்திற்காக பங்குதாரர்களைச் சென்றடைவதை மேலும் அதிகரிப்பதற்காகவும், அமைச்சகங்களில் தற்போதுள்ள ஆதாரங்களை உச்சபட்சமாகப் பயன்படுத்தி, ஒருங்கிணைந்த செயல்களை மேற்கொள்வதற்கும் ஒருங்கிணைந்த மண்டல அலுவலகங்களை (Integrated Regional Offices (IROs) அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் வனங்கள் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒருங்கிணைந்த மண்டல அலுவலகங்கள் 1 அக்டோபர் 2020 முதல் செயல்படத் துவங்கும். இந்த ஒருங்கிணைந்த மண்டல அலுவலகங்கள் பின்வரும் அலுவலகங்களின் மனித ஆற்றல் மற்றும் இதர ஆதாரங்களுடன் செயல்படும். ஆர் ஓ எச் கியூ பிரிவின் 10 மண்டல அலுவலகங்கள் (Regional Offices of ROHQ Division,) இந்திய வன ஆய்வு (Forest Survey of India) மண்டல அலுவலகங்கள் நான்கு; தேசிய புலி பாதுகாப்பு அமைப்புக்கான மண்டலமையம் (National Tiger Conservation Authority (NTCA),) மூன்று; மத்திய விலங்கு காட்சி சாலை அமைப்பின் (Central Zoo Authority (CZA) ) மண்டல அலுவலகங்கள் 4; வனவிலங்கு குற்ற கட்டுப்பாட்டு பியூரோ (Wildlife Crime Control Bureau - WCCB)) அமைப்பின் மண்டல அலுவலகங்கள் 5; துணை மண்டல அலுவலகங்கள் 3 ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு வலுப்படுத்தப்படும். இவ்வாறு ஒவ்வொரு ஒருங்கிணைந்த மண்டல அலுவலகமும், தற்போதுள்ள மண்டல அலுவலகம், மண்டல மையம் ஆகியவற்றிலிருந்து பிரதிநிதித்துவம் பெறும். ஒவ்வொரு ஒருங்கிணைந்த மண்டல அலுவலகத்தின் தலைவரும் மண்டல அலுவலர் என்று அழைக்கப்படுவார்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள 19 ஒருங்கிணைந்த மண்டல அலுவலகங்கள் ஒவ்வொன்றும் மத்திய சுற்றுச்சூழல் வனங்கள் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த மண்டல அமைப்பாகச் செயல்படும். அமைச்சகத்தின் அனைத்து பணிகளையும் இவை ஒருங்கிணைந்து மேற்கொள்ளும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x