Published : 17 Aug 2020 08:43 AM
Last Updated : 17 Aug 2020 08:43 AM
இந்தியாவின் பாரம்பரியங்கள், நம்பிக்கைகள், மற்ற காரணிகளுடன் மக்களின் தங்கள் எண்ணங்களை நிறைவேற்றி, எந்தவிதமான சிரமமும் இன்றி நாட்டை தற்சார்பு உடையதாக உருவாக்குவார்கள் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் இரு நாட்கள் பயணமாக சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் சென்றுள்ளார். ராய்ப்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள், சத்தீஸ்கர் பிரந்த் பிரச்சார் பிரமுக் சுரேந்திர குமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியது குறித்து சத்தீஸ்கர் பிரந்த் பிரச்சார் பிரமுக் சுரேந்திர குமார் நிருபர்களிடம் கூறுகையில் “ கிராமங்களில் பொருளதாாரத்தை வலுப்படுத்த வேண்டும். நாட்டை தற்சார்பு உடையதாகவும், தன்னிறைவு உடையதாகவும் மாற்ற தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்தியாவின் காலநிலை, நிலம், நம்பிக்கைகள், பாரம்பரியங்கள், வலிமை ஆகிய மிகப்பெரியவை, நாம் ஒரு தீர்மானம் எடுத்துவிட்டால், நாட்டை தற்சார்பு உடையநாடாக மாற்றுவதில் எந்தவிதமான சிரமும் இருக்காது என மோகன் பாகவத் நம்பிக்கை தெரிவித்தார்.
சுய மரியாதை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஒரு தனிநபராக நானும் குழுவாகிய நம் அனைவருமே நம் நாட்டை தற்சார்பு உடையதாக மாற்ற நமக்கிருக்கும் கடமைகளைச் செய்ய வேண்டும்.
நாட்டை தற்சார்புடையதாக மாற்றத் தேவையான அனைத்து விஷயங்களையும் நாம் நமது தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கையில் பின்பற்றத் தொடங்கினால் சரியான திசையில் இந்த உலகை வழிநடத்த ஊக்குவிக்க இந்தியா மீண்டும் எழும்.
நாட்டை தற்சார்பு உடையதாக மாற்ற தேவையான ஒட்டுமொத்த முயற்சிகளும் நடந்து வருகின்றன. கிராமப்புற பொருளதாாரத்தை வலிமைப்படுத்தவும், குடிசைத் தொழில்களை ஊக்கப்படுத்துவதும் அவசியம். மக்களிடையே சுதேசி பொருட்களைபயன்படுத்த வேண்டும் என்ற உணர்ந்து எழுந்திருக்கிறது என மோகன் பாகவத் தெரிவித்தார்
சமூகதத்தில் ஒற்றுமையை வலுப்படுத்துவது, கிராமப்புற மேம்பாட்டைக் கொண்டுவருவது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது போன்ற அம்சங்களும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன. புலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக ஆர்எஸ்எஸ் சார்பில் செய்யப்பட உதவிகள், நலப்பணிகள் குறித்து மோகன் பாகவத்திடம் நிர்வாகிகள் எடுத்துக்கூறினர்.
இவ்வாறு சுரேந்திரகுமார் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT