Published : 15 Aug 2020 02:03 PM
Last Updated : 15 Aug 2020 02:03 PM
நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் கரோனா தடுப்பு மருந்து கிடைப்பதற்கான திட்டம் தயாராக இருக்கிறது. அறிவியல் வல்லுநர்கள் ஒப்புதல் கிடைத்தவுடன் கரோனா தடுப்பு மருந்து மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்து அனைவருக்கும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி சுதந்திரதினத்தில் உறுதியளித்தார்.
நாட்டின் 74-வது சுதந்திரதினமான இன்று காலை டெல்லி ராஜ் காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று மலர்கள் தூவி பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். அதன்பின் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி வணக்கம் செலுத்தினார்.
அதன்பின் பிரதமர் மோடி பேசியதாவது:
கரோனா வைரஸ் பரவல் காலத்தில் முன்களத்தில் நின்று போராிட்டு வரும் மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள் ஆகியோருக்கு இந்த செங்கோட்டையில் நன்றி நன்றி தெரிவிக்கிறேன்.
கரோனா வைரஸ் குறித்து பேசும்போதெல்லாம் அனைவரின் மனதிலும் எழும் கேள்வி எப்போது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்பதுதான். நான் மக்களுக்கு சொல்ல விரும்புவதெல்லாம், நம்முடைய மருத்துவ விஞ்ஞானிகள், ரிஷிமுனிகள்அவர்கள் கடினமாக ஆய்வகங்களில் போராடி வருகிறார்கள்.
கரோனா வைரஸூக்கு எதிராக 3 தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு பரிசோதனை நிலைகளில் இருக்கின்றன. நம்முடைய மருத்துவ விஞ்ஞானிகள் கரோனாதடுப்பு மருந்துக்கு ஒப்புதல் கொடுத்தபின் இந்த மருந்து மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படும்.
நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும், ஒவ்வொருக்கும் கரோனா தடுப்பு மருந்து கிடைப்பதற்கான திட்டம் தயாராக இருக்கிறது. கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டபின், மிக்குறைந்த காலக்கட்டத்தில் மக்களுக்கு கிடைக்க உறுதி செய்யப்படும்.
என்னுடைய தலைமையிலான அரசு எப்போதுமே ஏழை மக்களின் உடல்நலத்திலும், ஏழை மகள்கள், சகோதரிகளின் உடல்நலத்திலும் அக்கறை கொண்டுள்ளது. மத்திய அரசின் ஜன் அவுஷாதி மருந்துக்கடைகள் மூலம் 5 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு ஒரு ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
நாங்கள் அமைத்துள்ள குழு, பெண்களுக்கு திருமணம் நடத்திவைக்க சரியான வயது என்பதையும், பெண்களிடையே சரிவிகித ஊட்டச்சத்துக் குறைபாடு குறித்த சிக்கல்களையும் களையவும் அந்த குழு முடிவுகளை எடுத்து பரிந்துள்ளது. அது குறித்து முடிவை விரைவில் அரசு எடுக்கும்.
பெண்களின் முன்னேற்றத்துக்கு இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விமானப்படை, கப்பற்படையில் பெண்களுக்கு போர்வீரர்களுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இப்போது பெண்கள் தலைவர்களாக உருவாகிவருகிறார்கள். பெண்களுக்கு எதிரான முத்தலாக் முறையையும் ஒழித்திருக்கிறோம்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT