Published : 15 Aug 2020 08:05 AM
Last Updated : 15 Aug 2020 08:05 AM
கடந்த ஆண்டு சீனாவில் புதிதாக உருவான கரோனா வைரஸ் உலகம் முழுவதும் மனிதர்களுக்கு பரவி வருகிறது. இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதில் இந்தியா உட்பட சில நாடுகள் மருந்தை தயாரித்து பல்வேறு கட்டங்களாக மனிதர்களுக்கு வழங்கி சோதனை நடத்தி வருகின்றன. விரைவில் இந்த மருந்து பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “கரோனா தடுப்பு மருந்து உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் விரைவில் இடம்பெறும். எனவே, இந்த மருந்து நியாயமான விலையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ஒரு கொள்கை அவசியமாகிறது. எனவே, கரோனா மருந்து விநியோகம் தொடர்பாக மத்திய அரசு ஒரு கொள்கையை உடனடியாக வகுக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT