Published : 14 Aug 2020 08:05 AM
Last Updated : 14 Aug 2020 08:05 AM
இந்தியாவில் நீண்டாக காலம் பிரதமராக இருந்தவர்களில் 4-வது இடத்தையும், காங்கிரஸ் அல்லாத பிரதமர்களில் நீண்டகாலம் காலம் பிரதமராக இருந்தவர்களில் முதலிடத்தையும் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மட்டுமே நீண்டகாலம் காங்கிரஸ் அல்லாத பிரதமராக இருந்தவர் என்ற சாதனையை வைத்திருந்தார். வாஜ்பாய் 2,272 நாட்கள் தொடர்ச்சியாக பிரதமராக இருந்தார், அவரின் சாதனையை பிரதமர் மோடி நேற்று முறியடித்தார்.
அதேசமயம், நீண்டகாலம் பிரதமராக இருந்தவர்களில் முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு(6,130நாட்கள்), இந்திரா காந்தி(5,829நாட்கள்), மன்மோகன் சிங்(3,656) பதவியில் இருந்தனர்.
பாஜகவின் தகவல்தொழில்நுட்பப்பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ இந்திய வரலாற்றில் நீண்டகாலம் பிரதமராக இருந்தவர்களில் 4-வது இடத்தைப் பிரதமர் மோடி பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் அல்லாத கட்சியிலிருந்து நீண்டகாலம் பிரதமராக இருந்தவர் எனும் பெருமையையும் மோடி பெற்றுள்ளார். வாஜ்பாய் 2,268 நாட்கள் பிரதமராக இருந்தார். இன்று அந்த சாதனையையும் மோடி முறியடித்தார்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று பிரதமராக மோடி பொறுப்பேற்றார். 5 ஆண்டுகளை நிறைவு செய்து 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 303 எம்.பி.க்களுடன் 2-வது முறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்றார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 1996-ல் பிரதமராக பதவி ஏற்று மே 16 முதல் ஜூன் 1-ம் தேதி வரை 13 நாட்கள் பதவியில் இருந்தார். 2-வது முறையாக 1998-ல் பதவி ஏற்று 13 மாதங்கள் அதாவது 1998 மார்ச் முதல் 1999 ஏப்ரல் வரை வாஜ்பாய் பதவியில் இருந்தார். அதைத்தொடர்ந்து 1999ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று 2004-ம் ஆண்டுவரை 5 ஆண்டுகளை நிறைவு செய்தார்.
1996-ம் ஆண்டில் 13 நாட்கள் பிரதமராக இருந்த வாஜ்பாய் மே 27-ம் தேதி நாடாாளுமன்றத்தில் இதுவரை கேட்டிராத மிகச்சிறப்பான உரை நிகழ்த்தினார். அதன்பின் தேவேகவுடா ஜூன் 1-ம் தேதி புதிய பிரதமராக பதவி ஏற்கும் வரை காபந்து பிரதமராகவும் வாஜ்பாய் செயல்பட்டார்.
இதில் நீண்டகாலம் பிரதமராக இருந்தவர்களில் காங்கிரஸ் கட்சியின் ஜவஹர்லால் நேரு கடந்த 1947 ஆகஸ்ட் 15 முதல் 1964, மே 27 வரை 6,130 நாட்கள் அதாவது 17 ஆண்டுகள் பிரதமராக இருந்தார்.
ஜவஹர்லால் நேருவின் மகள் இந்திரா காந்தி 1966 ஜனவரி 24 முதல் 1977 மார்ச் 24 வரையிலும், பின்னர் 1980 ஜனவரி 14 முதல் 1984, அக்டோபர் 31 ம் தேதிவரையிலும் பிரதமராக 5,829 நாட்கள் பிரதமாராக இருந்தார்.
காங்கிரஸ் சார்பில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் 2004 மே 22 முதல் 2014, மே 26 வரை 10 ஆண்டுகள் அதாவது 3,656 நாட்கள் பிரதமராக இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT