Last Updated : 13 Aug, 2020 08:25 PM

 

Published : 13 Aug 2020 08:25 PM
Last Updated : 13 Aug 2020 08:25 PM

ராமர் கோயிலுக்கான நன்கொடை அளிக்க வங்கிக் கணக்கை வெளியிட்டது அயோத்தி அறக்கட்டளை

புதுடெல்லி

ராமர் கோயிலுக்காக நன்கொடை அளிக்க வங்கிக் கணக்கை அதன் அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. இதில் பொதுமக்கள் அளிக்கும் தொகையின் மூலம் ராமர் கோயில் கட்டப்பட உள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா டிரஸ்ட் எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, பொதுமக்கள் தொடர்ந்து நன்கொடை அளிக்க முன் வந்தபடி உள்ளனர்.

இந்த சூழலை சாதகமாக்கி சில சமூக விரோதிகளும் இடையில் புகுந்து ராமர் கோயிலின் பெயரில் பணம் வசூல் செய்வதும் தொடங்கி விட்டது. இதன் மீதானப் புகார்களும் எழத் துவங்கி உள்ளது.

இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு அந்த அறக்கட்டளை சார்பில் அதிகாரபூவமாக ஒரு வங்கிக்கணக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், பொதுமக்கள் இனி நேரடியாகப் பணம் செலுத்தலாம் என அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

இது குறித்து ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் செயலாளரான சம்பக்ராய் கூறும்போது, ‘இன்று வெளியிட்டுள்ள வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் நன்கொடை தொகை அனைத்தும் ராமர் கோயில் கட்டுவதற்காக செலவிடப்படும்.

இந்த வங்கி கணக்கு விவரத்தை சமூகவலைதளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதனால், இனி அறக்கட்டளையின் பெயரில் எவரிடமும் பணம் தவறாகப் பணம் வசூலிக்கப்படும் வாய்ப்புகள் இல்லை.’ எனத் தெரிவித்தார்.

கோயில் நன்கொடைக்கான வங்கிக் கணக்கு விவரம் அறக்கட்டளையின் அதிகாரபூர்வமான இணையதளம், முகநூல் மற்றும் டிவிட்டர் பக்கத்திலும் வெளியாகி உள்ளன. இதில் பொதுமக்கள் அதிக அளவில் நன்கொடை செலுத்த நாடு முழுவதிலும் விழிப்புணர்வும் ஏற்படுத்த உள்ளது.

ராமர் கோயிலுக்காக ரொக்கப்பணமாக இல்லாமல் தங்கம், வெள்ளி என விலை உயர்ந்த உலோகங்களாகவும் அளிக்கப்படுகிறது. இவற்றை தானமாக அளிக்க விரும்புவர்களிடம், அயோத்தியின் கர்சேவக்புரத்தில் அமைந்துள்ள அறக்கட்டளையின் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளப்படுகிறது.

அறக்கட்டளையின் கூட்டம்

இதனிடையே, ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் நிர்வாகிகள் கூட்டம் டெல்லியில் மீண்டும் நடைபெற உள்ளது. அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் இக்கூட்டம் ஆகஸ்ட் 8 இல் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x