Last Updated : 13 Aug, 2020 03:29 PM

 

Published : 13 Aug 2020 03:29 PM
Last Updated : 13 Aug 2020 03:29 PM

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும்: மத்திய அரசுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி வலியுறுத்தல்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி : கோப்புப்படம்

புதுடெல்லி


மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை- 2020யை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தி எம்.பியும் வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை-2020 பெரும் விவாதத்தை உருவாக்கியிருக்கிறது, இந்த அறிவிக்கை மீது தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் இந்த வரைவு அறிவிக்கையைக் கடுமையாக எதிர்த்துவருகிறார்கள். மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இந்த வரைவு அறிவிக்கை பல்வேறு திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் முறைகளைக் கொண்டுள்ளது.

ராகுல் காந்தி ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார். அதில் “ சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கையைத் திரும்பப் பெற வேண்டும். சுற்றுச்சழல் தாக்க வரைவு அறிவிக்கையின் நோக்கம் தேசத்தை கொள்ளையடிப்பதுதான் என்பது தெளிவாகத் தெரிகிறது.” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அளித்த பேட்டியில் “ எவ்வாறு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கைக்கு எதிராகப் போராட்டம் நடத்த முடியும். இது வரைவு அறிவிக்கைதானே, முழுமையான அறிவிக்கை அல்லவே. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து இப்போதே ராகுல் காந்தி கருத்து தெரிவிப்பது தேவையில்லாதது, முதிர்ச்சியற்றது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தி இந்து(ஆங்கிலம்) நாளேட்டில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை குறித்து கட்டுரை எழுதியுள்ளார்.

அந்த கட்டுரையை தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்து பதிவிட்டுள்ளார். அதில் “ இயற்கையைப் பாதுகாத்தால், அவள் உங்களை பாதுகாப்பாள். இந்தியாவின் சுற்றுச்சூழல் விதிமுறைகளை அழிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை-2020 உடனடிாயக திருப்பப்பெற வேண்டிய அவசியமாகும்” எனத் தெரிவித்தார்.

அந்த கட்டுரையில் சோனியா காந்தி குறிப்பிடுகையில் “ சுற்றுச்சூழலைக் காக்க மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது. ஆதலால், கண்டிப்பாக சுற்றுச்சூழல் தாக்க மதி்பீட்டு வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும். இந்தியாவின் சுற்றுச்சூழல் விதிகளை சிதைப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்.

இப்போது அத்தியாவசியமானது என்னவென்றால், உலக வெப்பமயமாதல், கரோனா வைரஸுக்கு எதிரானப் போரில் பரவலான மக்களின் கருத்துக்களைப் பெற்று தேசியஅளவிலான தி்ட்டத்தை உருவாக்க வேண்டும்.
கரோா வைரஸின் மோசமான விளைவுகள் உலகத்துக்கே எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதலால் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க கைகோர்த்து செயல்பட்டு, அனைத்து மக்களுக்கும் சுகாதார வசதியும் மற்றும் கவுரமிக்க வாழ்வாதாரத்தை கிடைக்க வசதி செய்ய வேண்டும்.

இந்தியாவின் செழுமையான பல்லுயிர் தன்மை மற்றும் பரவலான சமத்துவமின்மைக்கும் கண்டிப்பாக நாம் இப்போது கவனம் செலுத்த வேண்டும். மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை துரத்திச்செல்லும்போது நம்முடைய தேசம் சுற்றுச்சூழலையும், மக்களின் உரிமைகளையும் பெருமளவு தியாகம் செய்துள்ளது.

நமது தேச முன்னேற்றத்திற்கு வர்த்தக பரிமாற்றங்கள் நிச்சயமாக தேவை, ஆனால் எப்போதும் மீற முடியாத எல்லைகள் இருக்க வேண்டும், கடந்த ஆறு ஆண்டுகளில் நமது சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டமைப்பை மத்திய அரசு அழித்துவிட்டது.

இந்த பெருந்தொற்று நோய் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார நிர்வாக முறையை பிரதிபலிக்கவும் மறு ஆய்வு செய்யவும் வைத்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக, மத்திய அரசு ஊரடங்கு நேரத்தில் எந்தவிதமான பொதுமக்களுடன் கலந்தாய்வும் செய்யாமல், பலதிட்டங்களுக்கு அனுமதியளித்துள்ளது.

இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை, சூழலை மாசுபடுத்துபவர்களுக்கும், விதிமுறைகளை மீறுபவர்களுக்கும் திட்டத்தை முடித்தபின் நற்சான்று அளிக்கிறது. நமது சுற்றுச்சூழலை எப்போதும் இல்லாத அளவு அழிக்கிறது

இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x