Last Updated : 13 Aug, 2020 01:58 PM

 

Published : 13 Aug 2020 01:58 PM
Last Updated : 13 Aug 2020 01:58 PM

கரோனா வைரஸ்: 10,000 சோதனைகளின் போது 3000-3,500, இப்போது 75,000 சோதனைகள் ஆனால் 4,000 மட்டுமே தொற்றுக்கள்: பிஹார் அரசு பொய் கூறுகிறது: தேஜஸ்வி யாதவ் தாக்கு

பிஹார் நிதிஷ் குமார் அரசு கரோனா தொற்று விவகாரத்தில் புள்ளி விவரங்களைத் திரிக்கிறது, பொய் கூறுகிறது என்று தேஜஸ்வி யாதவ் சாடியுள்ளார்.

பாட்னாவில் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் கூறியதாவது:

10,000 பரிசோதனைகள் செய்த போது கரோனா தொற்று எண்ணிக்கை 3000-3500 ஆக இருந்தது, இப்போது 75,000 சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றால் தொற்று எண்ணிக்கை எப்படி 4000 என்பதாக மட்டும் இருக்கும்?

இதன் பொருள் என்ன பிஹார் அரசு புள்ளிவிவரங்களைத் திரிக்கிறது, பொய் சொல்கிறது. ரேபிட் ஆண்டிஜென் டெஸ்ட்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி நிதிஷ் குமார் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளப் பார்க்கிறார்.

பிஹார் அரசு தரவுகளின் படி சராசரியாக 6,100 ஆர்டி-பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது 10% மட்டுமே கோவிட்-19 டெஸ்ட்கள் மேற்கொள்ளப்படுகிறது. ஆர்.டி. பிசிஆர் டெஸ்ட்களை அதிகரிக்க வேண்டும் என்பதே நம் கோரிக்கை.

கோவிட்-19 பேக்கேஜில் பல்வேறு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு ரூ.890 கோடி அளித்துள்ளது. ஆனால் மத்திய அரசு பிஹாருக்கு எந்தத் தொகையையும் அளிக்கவில்லை.

கோவிட்-19 நிலவரம் மோசமடைவது தெரிந்தும் மத்திய அரசு பிஹாரை மாற்றான் தாய் அணுகுமுறையுடன் நடத்துகிறது, என்றார் தேஜஸ்வி யாதவ்.

பிஹார் சுகாதாரத்துறை கணக்கின் படி மொத்தம் 90,553 கோவிட் தொற்று நோய் பாதித்தவர்கள் உள்ளனர். இதில் 60,068 பேர் குணமடைந்துள்ளனர். 30,010 பேர் சிகிச்சையில் உள்ளனர். 475 மரணங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x