Last Updated : 12 Aug, 2020 05:07 PM

1  

Published : 12 Aug 2020 05:07 PM
Last Updated : 12 Aug 2020 05:07 PM

167 ஆண்டுகளில் ரயில்வேயில் முதல்முறை: பயணிகளிடம் பெற்ற டிக்கெட் முன்பதிவு வருவாயைவிட திரும்ப அளித்த கட்டணம் அதிகம்; ஆர்டிஐயில் தகவல்

கோப்புப்படம்

புதுடெல்லி


ரயில்வே துறையின் 167 ஆண்டுகால வரலாற்றில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு மூலம் ஈட்டிய வருவையைவிட, அவர்களுக்குக் கட்டணத்தை திருப்பிச் செலுத்தியது முதல்முறையாக அதிகரித்துள்ளது என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்றால் பயணிகள் போக்குவரத்து கடந்த 3 மாதங்களாக ரயில் ரத்து செய்யப்பட்டதால், நடப்பு நிதியாண்டில் முதல்கலாண்டில் ரயில்வே துறைக்கு மூலம் ரூ.1,066 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் சந்திர சேகர் கவுர் என்பவர் தாக்கல் செய்த தகவல் அறியும் மனுவில் இந்தத் தகவலை ரயில்வே துறை அளித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக, நடப்பு நிதியாண்டின் முதல் 3 மாதங்களாக ரயில்வேதுறை தனது பயணிகள் போக்குவரத்தை ரத்து செய்தது. கட்டுப்பாடுகளுடன் சில ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன.
அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் ரூ.531.12 கோடியும், ேமமாதத்தில் ரூ.145.24 கோடியும், ஜூன் மாதத்தில் ரூ.390.60 கோடியும் வருவாய் இழப்பு(அனைத்தும் நெகட்டிவ்) ஏற்பட்டுள்ளது.

வருவாய் மைனஸில் சென்றது என்றால், டிக்கெட் முன்பதிவு மதிப்பின் அளவைக் காட்டிலும், திரும்பக் கொடுத்த(ரீபண்ட்) கட்டணம் அதிகமாகும்

இதுகுறித்து ரயில்ேவ செய்தித்தொடர்பாளர் டிஜெ நரேன் கூறுகையில் “ கரோனா வைரஸ் பரவல் காரணமாக முதல்முறையாக 167 ஆண்டுகளில் ரயில்வே பயணிகள் டிக்கெட் முன்பதிவைவிட அவர்களுக்கு ரீபண்ட் அளித்த தொகை அதிகமாகும்.

ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களிலும் பயணிகளிடம் பெற்ற டிக்கெட் கட்டணம் முழுமையாக திருப்பி அளிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பயணிகள் போக்குவரத்தையும் காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது.

கடந்த நிதியாண்டின்(2019-20) முதல் காலாண்டில் ஏப்ரல் மாதத்தில் ரயில்வே ரூ.4,345 கோடியும், மே மாதத்தில் ரூ.4,463 கோடியும், ஜூனில் ரூ.4,589 கோடியும் பயணிகள் பிரிவில் ரயில்வே வருவாய் ஈட்டியது.

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த நிதியாண்டில் ரயில்வே துறைக்கு ரூ.40 ஆயிரம் கோடி இழப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், சரக்குப் போக்குவரத்து ஓரளவுக்கு ரயில்வேக்கு கைகொடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.5,744 கோடியும், மே மாதத்தில் ரூ.7,289 கோடியும், ஜூனில் ரூ.8,706 கோடியும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

இது கடந்த நிதியாண்டில் ஏப்ரல் மாதத்தில் ரூ.9,331 கோடியும், மே மாதத்தில் ரூ.10,032 கோடியும், ஜூனில் ரூ.9,702 கோடியும் சரக்குப்போக்குவரத்து மூலம் வருவாய் கிடைத்தது.

கடந்த ஆண்டில் இருந்ததைவிட, கடந்த இரு வாரங்களாக சரக்குப் போக்குவரத்து குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்துள்ளது. இது வரவேற்கக்கூடிய அம்சமாகும். பயணிகள் போக்குவரத்து மூலம் வருவாய் இழப்பு இருந்தாலும், ரயி்ல்வே துறை சிறப்பான நிர்வாகத்தால் சரக்குப் போக்குவரத்தில் வருவாய் ஈட்டி வருகிறது.

மே 1-ம் தேதி முதல் பல்ேவறு மாநிலங்களிலும் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்ல இயக்கப்பட்ட ஷ்ராமிக் ரயில்களால் ரயில்வே துறைக்கு ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது “எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x