Published : 12 Aug 2020 09:48 AM
Last Updated : 12 Aug 2020 09:48 AM
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆலப்புழாவில் இருந்த 151 ஆண்டுகால பழமையான தேவாலயம் இடிந்து விழுந்தது.
நெல்வயல்களுக்கு நடுவே தாழ்நிலப்பகுதியில் இந்த தேவாலயம் 151 ஆண்டுகாலமாக இருந்து வந்தது. இந்நிலையில் அங்குள்ள பம்பா அணை திறக்கப்பட்டதால் பெருக்கெடுத்த வெள்ள நீர் தேவாலயத்துக்குள் புகுந்தது. இதனையடுத்து தேவாலயம் இடிந்து விழுந்தது. ஆனால் இதனால் ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை.
அதிகாரிகள் முன் கூட்டியே எச்சரித்ததால் தேவாலயத்தில் இருந்த நிர்வாகிகள், ஊழியர்கள் வெளியேறி விட்டனர்.
இந்த தேவாலயம் 1869-ம் ஆண்டு டபிள்யு.ஜே.ரிச்சர்ட்சன் என்பவரால் கட்டப்பட்டது. செயிண்ட்பால் சிஎஸ்ஐ தேவாலயமான இதில் சுமார் 30 குடும்பங்கள் வழிபாடு செய்து வந்தனர்.
கனமழை காரணமாக குட்டநாடு பகுதியில் சமீப காலங்களாக நிறைய கரை உடைப்புகள் ஏற்படுகின்றன. கிழக்குப் பகுதியிலிருந்து வெள்ள நீர் புகுந்து நாசம் விளைவிப்பதால் நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்குகின்றன. இதோடு நெற்பயிர்களும் நாசமாகி வருகின்றன.
மழை குறைந்தாலும் இப்பகுதியில் ஆற்றில் நீர் மட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT