Published : 11 Aug 2020 04:43 PM
Last Updated : 11 Aug 2020 04:43 PM
டெல்லியில் பாஜக ஆளும் 3 நகராட்சிகளில் நடத்தப்படும் நகராட்சிப் பள்ளிகளை பாஜகவினரால் நடத்த முடியவில்லை எனில் எங்களிடம் கொடுங்கள், டெல்லி அரசு எடுத்து நடத்தும் என்று டெல்லி மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
பாஜக ஆளும் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ஒழுங்காகச் சம்பளம் கொடுக்கப்படுவதில்லை, மாணவர்களுக்கு புத்தகங்களும் வழங்கப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்து வருகின்றன.
“எம்சிடி பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுவதில்லை, மாணவர்களுக்கு ஒழுங்காகப் புத்தகங்களும் வழங்கப்படுவதில்லை என்று எங்களுக்கு தொடர்ச்சியாகப் புகார்கள் வருகின்றன.
பாஜக அவற்றை நடத்த திறனில்லை என்றால் எங்களுக்கு கொடுங்கள், நாங்கள் நடத்திக் காட்டுகிறோம். முறையாக நடத்திக் காட்டுகிறோம்.
ஆனால் பாஜக முதலில் தங்களால் நிர்வகிக்க முடியவில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்” என்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 1 Comments )
இது டெல்லி நகராட்சி பள்ளிகளின் நிலை மட்டுமில்லை. மத்திய அரசால் நடத்தப்படும் பள்ளிகளின் நிலையே இதுதான். கடந்த சில ஆண்டுகளாகவே நிரந்தர ஆசிரியர்கள் நியமனம் மிகவும் குறைந்துவிட்டது. ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படும் ஆசிரியர்கள் சில மாதங்களிலேயே வேறு வேலை கிடைத்து சென்றுவிடுகின்றனர் (அது அவர்கள் குற்றமில்லை). ஒரே ஆண்டில் ஒரு பாடத்தை ஏழு, எட்டு ஆசிரியர்கள் எடுத்த/எடுக்கும் சம்பவங்கள் சகஜம். அரசால் ஒதுக்கப்படும் நிதி பெருமளவு குறைக்கப்பட்டுவிட்டது. மாணவர்களின் பெற்றோரிடம் கையேந்தும் நிலை பல பள்ளிகளில்.
5
0
Reply