Published : 10 Aug 2020 03:09 PM
Last Updated : 10 Aug 2020 03:09 PM
மத்திய அரசு சமீபத்தில் அனுப்பிய சுற்றறிக்கையின் படி மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு கார்ப்பரேட் நிறுவனம் நிதியளித்தால் அது கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதியாகாது என்று தெரிவித்திருந்தது.
ஆனால் அதே சுற்றறிக்கையில் பிஎம் கேர்ஸ் நிதிக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நன்கொடையளித்தால் அது கார்ப்பரேட் சமூகப் பொறுப்பின் கீழ் வரும் என்று கூறப்பட்டுள்ளது.
இது ‘பாரபட்சமானது’ என்று கோரி மேற்கு வங்க திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மோய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் மனு செய்து கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதி அசோக் பூஷண் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நிராகரிப்புக்குக் காரணமாக நீதிபதி கூறிய போது, இதே போன்ற மனு ஒன்றை மே மாதம் மேற்கொண்ட மனுதாரர் பிற்பாடு அதை அவரே வாபஸ் பெற்றார். எனவே மே 5ம் தேதியே நிராகரித்த இதே போன்ற மனுவை மீண்டும் விசாரிக்க முகாந்திரம் இல்லை என்று கூறி தள்ளுபடி செய்தார்.
எம்.பி. மஹுவா மோய்த்ரா பிஎம் கேர்ஸ் நன்கொடைக்கும் முதல்வர் நிவாரண நிதிக்கும் இடையே பாகுபாடு உள்ளது என்று கூறி பிஎம் கேர்ஸுக்கு நிதியளித்தால் அது கார்ப்பரேட் சமூகப் பொறுப்பின் கீழ் வரும், ஆனால் முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்தால் அது கார்ப்பரேட் சமூகப் பொறுப்பின் கீழ் வராது என்று கூறப்பட்டுள்ளதைக் கண்டித்து மனு செய்திருந்தார்.
இந்த மனுவைத்தான் உச்ச நீதிமன்றம் முகாந்திரமற்றது என்று கூறி தள்ளுபடி செய்துள்ளது.
சிஎஸ்ஆர் என்பது நிறுவனங்கள் சமூக நன்மைக்காகவும் சுற்றுச்சூழல் நன்மைக்காகவும் அளிக்கும் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நன்கொடையாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT