Published : 09 Aug 2020 01:16 PM
Last Updated : 09 Aug 2020 01:16 PM
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக பாஜக எம்.பி. மனோஜ் திவாரி அறிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 21 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனாவில் மாநில முதல்வர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பாதிக்கப்படும் நிலையும் இருந்து வருகிறது. மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒடிசா, அசாம், உத்தரப் பிரதேசம், தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டு வெற்றிகரமாக மீண்டுள்ளனர். சிலர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
டெல்லி அருகே, ஹரியாணாவின் குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அமைச்சர் அமித் ஷாவை கடந்தசனிக்கிழமை சந்தித்துப் பேசியதால், தன்னை தனிப்படுத்திக் கொண்டுள்ளதாக சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார்.
இதுபோல, அமித் ஷாவுடன் தொடர்பில் இருந்த மத்திய அமைச்சர்கள் பாபுல் சுப்ரியோவும் கஜேந்திர சிங் ஷெகாவத்தும் தங்களை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் அமித் ஷா கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக பாஜக எம்.பி. மனோஜ் திவாரி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘கரோனா தொற்று ஏற்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தற்போது பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு நெட்டிவ் என வந்துள்ளது. ’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT