Published : 08 Aug 2020 07:51 PM
Last Updated : 08 Aug 2020 07:51 PM
கோவிட்-19 இறப்பைக் குறைப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் கவனம் செலுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய மற்றும் மாநில, யூனியன் பிரதேச அரசாங்கங்களால், கோவிட் - 19 இன் ஒருங்கிணைந்த, தரப்படுத்தப்பட்ட, செயல்திறன் மேலாண்மை காரணமாக தேசிய அளவில் இறப்பு விகிதம் (CFR) குறைவாக இருப்பதை உறுதி செய்துள்ளது.
இது தற்போது 2.04சதவீதமாக உள்ளது. கோவிட்-19 இன் கூட்டு நிர்வாகத்திற்கான மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை தொடர்ச்சியாக மதிப்பாய்வு செய்தல் மற்றும் கையாளுதல் ஆகியவற்றின் ஒரு பகுதியாக, தேசிய சராசரியை விட அதிக இறப்பு விகிதம் (CFR) உள்ள மாநிலங்களில், கோவிட் – 19, காரணமாக இறப்பைத் தடுக்கும் மற்றும் குறைப்பதற்கான முயற்சிகளில் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் ஆதரிப்பதற்கும், இரண்டு உயர் மட்ட காணொலிக் கூட்டங்களுக்கு ஆகஸ்ட் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷண் தலைமை தாங்கினார்.
இன்றைய கூட்டம் எட்டு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 13 மாவட்டங்களை மையமாகக் கொண்டது. இவை அசாமில் உள்ள காம்ரூப் மெட்ரோ; பிஹாரில் பாட்னா; ஜார்க்கண்டில் ராஞ்சி; கேரளாவில் ஆலப்புழா மற்றும் திருவனந்தபுரம்; ஒடிசாவில் கஞ்சம்; உத்தரப்பிரதேசத்தில் லக்னோ; மேற்கு வங்கத்தில் 24 பர்கனாஸ் வடக்கு, ஹூக்லி, ஹவுரா, கொல்கத்தா மற்றும் மால்டா; டெல்லி ஆகியவை ஆகும்.
இந்தியாவின் இந்த மாவட்டங்களில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 9 சதவீதம் மற்றும் கோவிட் தொற்று நோயால் இறந்தவர்கள் 14 சதவீதம் ஆகும். ஒரு மில்லியனுக்கு குறைந்த சோதனைகள் மற்றும் அதிக உறுதிப்படுத்தல் சதவீதத்தையும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நான்கு மாவட்டங்களில் தினசரி புதிய நோய் தொற்று பாதிப்பில் ஒரு அதிகரிப்பு காணப்படுகிறது. அசாமில் கம்ரூப் மெட்ரோ; உத்தரபிரதேசத்தில் லக்னோ; கேரளாவில் திருவனந்தபுரம் மற்றும் ஆலப்புழா. காணொலிக் கூட்டத்தில் மாவட்டக் கண்காணிப்பு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், தலைமை மருத்துவ அதிகாரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவக் கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் எட்டு மாநிலங்களைச் சேர்ந்த முதன்மைச் செயலாளர் (சுகாதாரம்) மற்றும் தேசிய சுகாதாரப் பணியாளர்கள் (NHM) பங்கேற்றனர்.
நோய்த் தொற்றில் இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் முக்கியமாக இருக்கும் பல சிக்கல்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. குறைந்த ஆய்வகப் பயன்பாட்டின் சிக்கல்களைத் தீர்க்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது, அதாவது ஆர்டி-பி.சி.ஆருக்கு (RT-PCR) ஒரு நாளைக்கு 100 க்கும் குறைவான சோதனைகள் மற்றும் பிறருக்கு 10 சோதனைகள்; ஒரு மில்லியன் மக்களுக்கு குறைந்த சோதனைகள்; கடந்த வாரத்திலிருந்து முழுமையான சோதனைகளில் குறைவு; சோதனை முடிவுகளில் தாமதம்; மற்றும் சுகாதாரப் பணியாளர்களிடையே அதிக உறுதிப்படுத்தல் சதவீதம். அனுமதிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் இறக்கும் நோயாளிகளின் சில மாவட்டங்களின் அறிக்கைகளைப் பார்க்கும் போது சரியான நேரத்தில் பரிந்துரை மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆம்புலன்ஸ்கள் கிடைக்காமல் இருப்பது போன்ற காரணங்கள் ஏற்று கொள்ளதக்கதில்லை என்பது குறித்து மாநிலங்களுக்கு எடுத்து கூறப்பட்டது. நோய்த் தொற்றுள்ளவர்களை தினமும் நேரில் பார்வையிடுதல், தொலைபேசி ஆலோசனைகளில் சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் வீட்டுத் தனிமைப்படுத்தலின் கீழ் அறிகுறிகள் உடையவர்களைக் கண்காணிப்பதை உறுதிசெய்ய வேண்டிய அவசியம் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது.
சரியான நேரத்தில் மதிப்பீட்டை உறுதிப்படுத்தவும், உள்கட்டமைப்புக்கு முன்கூட்டியே தயாராகவும் மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. ஐ.சி.யூ படுக்கைகள், ஆக்ஸிஜன் வழங்கல் போன்றவை, நடைமுறையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கை விகிதத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
புதுடெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாரத்திற்கு இரண்டு முறை காணொலி அமர்வுகளை நடத்துகிறது என்பது மீண்டும் வலியுறுத்தப்பட்டது, அங்கு கரோனா இறப்பு விகிதத்தைக் குறைக்க, மாநிலங்களின் பல்வேறு மருத்துவமனை ஐ.சி.யுகளில் உள்ள கோவிட் -19 நோயாளிகளுக்கு, திறமையான மருத்துவ மேலாண்மை குறித்து டெலி, வீடியோ கலந்தாய்வு மூலம் ஒரு சிறப்பு மருத்துவர்கள் குழு வழிகாட்டுதல்களை வழங்குகிறது.
மருத்துவ நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக மாநிலத்தின் சிறப்பான மையங்கள் மற்ற மருத்துவமனைகள் இந்த காணொளி அமர்வுகளில் தவறாமல் பங்கேற்பதை உறுதி செய்ய மாநில அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நோயாளியுடன் தடையற்ற கட்டுப்பாட்டு மற்றும் நோய் பாதிப்பு மண்டலங்களைத் திறம்பட நிர்வகிப்பதற்கான அனைத்து அமைச்சக நெறிமுறைகளையும் பின்பற்றுமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதுடன், ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவ மேலாண்மையில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
துணை நோய்கள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் போன்ற அதிக ஆபத்துள்ள மக்களிடையே கடுமையான கண்காணிப்பால் தடுக்கக்கூடிய மரணங்கள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT