Published : 06 Aug 2020 07:52 AM
Last Updated : 06 Aug 2020 07:52 AM

இந்திய அரசியல் சாசனத்தில் ராமர், சீதை, லஷ்மண் படம்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ட்வீட்

மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ராமர் கோயில் பூமி பூஜை என்ற வரலாற்றுத் தருணத்தை ஒட்டி ட்விட்டர் மற்றும் லிங்க்டு இன் வலைத்தளங்களில் இந்திய அரசியல் சாசனத்தின் அசல் சித்திர வேலைப்பாட்டை விதந்தோதியுள்ளார்.

தன் சமூகவலைத்தள பக்கத்தில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருப்பதாவது:

இந்திய அரசியல் சாசனத்தின் அசல் ஆவணத்தில் அடிப்படை உரிமைகள் என்ற அத்தியாயத்தின் துவக்கத்தில் ராமர் படம் இடம்பெற்றுள்ளது.

ராவணனை போரில் வென்று விட்டு ராமர், சீதை, லஷ்மண் ஆகியோர் அயோத்திக்குத் திரும்பும் சித்திரம் அதில் இடம்பெற்றுள்ளது, இதனை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

என்று கூறியுள்ளார்

இதனை அவர் பதிவிட்ட பிறகே 18,000த்திற்கும் அதிகமான லைக்குகள் 4,500 மறு பகிர்வுகளை இந்தப் பதிவு சேகரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x