Published : 06 Aug 2020 07:26 AM
Last Updated : 06 Aug 2020 07:26 AM
இந்தியாவின் பெருமையான ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற மாண்பை எப்போதும் பாதுகாக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இது குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்காத மம்தா பானர்ஜி, தனது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், “நமது நாட்டின் பெருமைக்குரிய சிறப்பே ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதுதான். இந்த மாண்பினை நீண்ட காலமாக நாம் பாதுகாத்து வருகிறோம். எதிர்காலத்திலும் இது பாது
காக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் நேற்று தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அயோத் தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில், அதுதொடர்பான கொண்டாட்டங்களை தடுக்கும் விதமாகவே, இந்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசுடனான மோதல் போக்கை மம்தா பானர்ஜி தொடர்ந்து கடைபிடித்து வருகிறார் என்று மாநில பாஜக. வினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT