Published : 05 Aug 2020 04:19 PM
Last Updated : 05 Aug 2020 04:19 PM
நூற்றாண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்காடப்பட்ட ஸ்ரீ ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் எனத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், முஸ்லிம்களுக்கு தனியாக மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலம் வழங்கவும் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரின் அடிப்படையில் ஸ்ரீ ராமஜென்ம தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையைத் தொடங்கிய மத்திய அரசு, அதனிடம் கோயில் கட்டும் பணியை ஒப்படைத்துள்ளது. வரலாற்று சிறப்பு மிகுந்த இந்த நாளில் அயோத்தி ராமர் கோயிலுக்கு இன்று பூமி பூஜை நடத்தப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
கடந்த 500 ஆண்டுகளாக போர்கள், போராட்டங்கள், வன்முறைகள், கலவரங்கள், சட்டப்போராட்டம் என அனைத்தையும் ராமர் கோயில் சந்தித்துள்ளது. அந்த கோயில் கடந்து வந்த சுருக்கமான பாதை
1528: முகலாயப் பேரரசரின் படைத்தளபதி மிர் பாகியால் பாபர் மசூதி கட்டப்பட்டது.
1853: பாபர் ஆட்சிக் காலத்தில் ராமர் கோயில் ஒன்று இடிக்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து பெரிய கலவரம் வெடித்ததாகவும் பதிவுகள் உள்ளன.
1885: ராமஜென்ம பூமி,பாபர் மசூதி சர்ச்சைக்குரிய இடத்தைச் சுற்றி சுவர் எழுப்ப பைசாபாத் நீதிமன்றத்தில் மகந்த் ரகுபர் தாஸ் மனுச் செய்தார். அதை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
1894: டிசம்பர் 22ம் தேதி இரவு சர்ச்சைக்குரிய இடத்துக்கு வெளியே ராமர்,சீதா சிலைகள் வைக்கப்பட்டன. இதனால் பெரும் பிரச்சினை உருவானதால் அந்த இடம் பூட்டப்பட்டது. இதற்கு இந்து, முஸ்லிம் தரப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றம் சென்றனர்.
1950: ராமர் சிலையை வழிபட அனுமதி கோரி பைசாபாத் நீதிமன்றத்தில் கோபால் சிம்லா விஷாரத் என்பவர் மனுச் செய்தார். அந்த சிலையை வழிபட அனுமதி கோரி பரமஹம்ச ராமச்சந்திர தாஸும் மனுச் செய்தார். பூஜை செய்ய அனுமதி கிடைத்தாலும் சர்ச்சைக்குரிய மையப்பகுதி பூட்டியே இருந்தது.
1959: நிர்மோஹி அகாரா அமைப்பு சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
1961: உத்தரப்பிரதேச சன்னி வக்பு வாரியமும் சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோரி மனுத்தாக்கல் செய்தது.
1986, பிப்.1: இந்து மதத்தினர் மட்டும் வழிபாடு நடத்த சர்ச்சைக்குரிய இடத்தை திறக்குமாறு உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
1989, ஆக்.14: சர்ச்சைக்குரிய இடத்தில் தற்போதுள்ள நிலையே தொடரலாம் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
1991: உ.பி.யில் பாஜக தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றி, முதல்வராக கல்யாண் சிங் பதவி ஏற்றார்.
1992, டிச.2: பாபர் மசூதி இடிக்கப்பட்டது
1993,ஏப்.3: சர்ச்சைக்குரிய இடத்தில் சில ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த மத்திய அரசு அயோத்தியா சட்டத்தைக் கொண்டுவந்தது. இந்த சட்டத்தின் பல்வேறு கோணங்களை எதிர்த்து இஸ்மாயில் பரூக்கி என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்ச நீதிமன்றத்துக்கும் சென்றார்.
1994, அக்.24: இஸ்மாயில் பரூக்கி தாக்கல் செய்த மனுவில் மசூதி, இஸ்லாம் மதத்தின் ஒரு அங்கம் அல்ல என்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
2002, ஏப்: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என அலகாபாத்உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தத் தொடங்கியது.
2003, மார்.13: கையகப்படுத்த நிலத்தில் எந்தவிதமான மதவழிபாடுகளும் நடக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
2010, செப்.30: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை 2:1 என்ற விகிதத்தில் வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, லாம் லல்லா பிரித்து தீர்ப்பளித்தது.
2011, செப்30: அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டது.
2016: சர்ச்சைக்குரியஇடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
2017, மார்21: அயோத்தி வழக்கில் அனைத்து தரப்பினரும் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வகாணும்படி அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கேஹர் ஆலோசனை வழங்கினார்.
2017,ஆக்.7: அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க 3 நீதிபதிகள் அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்தது.
2018, பிப்8: அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியது.
2018, ஜூலை20: உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது.
2018, செப்.27: அயோத்தி வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றி, 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வுவிசாரிக்கும் எனத் தெரிவித்தது
2018, டிச் 24: 2019, ஜன.4-ம் தேதி வழக்கை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
2019, ஜன.8: அயோத்தி வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், எஸ்.ஏ.போப்டே, என்வி ரமணா, யுயுலலித், டி ஒய்சந்திசூட் ஆகிய 5 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என நீதிமன்றம் அறிவித்தது.
2019 ஜன 29: அயோத்தியில் கையகப்படுத்தப்பட்ட 67 ஏக்கர் நிலத்தை அதன் உண்மையான உரிமையாளர்களிடம் ஒப்படைக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது.
2019, பிப்26: இந்த வழக்கில் சமாதானம் ஏற்படுத்துவது குறித்து மத்தியஸ்த குழுவை ஏற்படுத்துவது குறித்து மார்ச் 5-ம் தேதி உத்தரவிடுவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
2019, மார்8: இந்த வழக்கில் மத்தியஸ்தம் செய்ய முன்னாள் நீதிபதி எப்எம் கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரை நியமித்தது.
2019, மே9: மத்தியஸ்தக் குழு இரு தரப்பினரிடமும் பேசி இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்தது.
2019, மே10: மத்தியஸ்தக் குழுவின் காலத்தை ஆகஸ்ட் 15-ம் தேதிவரை நீடித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
2019,ஆக.1: மத்தியஸ்தக் குழுவினர் தங்களின் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
2019, ஆக.2: ஆகஸ்ட் 6-ம் தேதிமுதல் அயோத்தி வழக்கில் நாள்தோறும் விசாரணை நடக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
2019, அக்.4: அயோத்தி வழக்கில் விசாரணை அக்.17-ம் தேதி முடிந்துவிடும், நவம்பர் 17-ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
2019, நவம் 9: அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்ட வழங்கவும் உத்தரவிட்டது.
2020,பிப்.5: ராமர் கோயில் கட்டுவதற்காக உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 15 உறுப்பினர்களஅ கொண்ட அறக்கட்டளையை அறிவித்தார்.
2020, பிப்.19: ராமர் கோயில் அறக்கட்டளைக்கான நிர்வாகிகளை மத்திய அரசு அறிவித்தது.
2020, ஆக.5: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடத்தப்பட்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT