Published : 05 Aug 2020 03:32 PM
Last Updated : 05 Aug 2020 03:32 PM
அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை விழா நிகழ்ச்சியையொட்டி குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உட்பட பலரும் வீடுகளில் வழிபாடு நடத்தினர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
இதன்படி இன்று (ஆகஸ்ட் 5-ம் தேதி) அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. பிரதமர் மோடி கலந்து கொண்டு ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார்.
வேத மந்திரங்களை முழங்கி, பூஜை பூஜையைத் தொடங்கினர். பூமி பூஜை முடிந்தபின் ராமர் கோயிலுக்காக 40 கிலோ எடையுள்ள முதல் வெள்ளி செங்கல்லை பிரதமர் மோடி தொட்டு வைத்து அடிக்கல் நாட்டினார்.
விழாவில் உ.பி. ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை தலைவர் நிருத்திய கோபால் தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பூமி பூஜையில் பங்கேற்ற பிரதமர் மோடி, மோகன் பாகவத், ஆதித்யநாத், ஆனந்திபென் படேல் ஆகியோரும் முகக்கவசம் அணிந்து, சமூக விலகலுடன் பூஜையில் பங்கேற்றனர்.
மற்ற விஐபிக்கள், சாதுக்கள், பீடாதிபதிகள் என நூற்றுக்கணக்கோர் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர்.
கரோனா தொற்று அச்சம் காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்க குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அதேசமயம் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
இதனால் நாடுமுழுவதும் மக்கள் தொலைக்காட்சி வாயிலாக பார்த்தனர். பூமி பூஜை விழாவையொட்டி நாட்டின் பல பகுதிகளிலும் பாஜகவினர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். மும்பை பாஜக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கலந்து கொண்டு ராமாயண பாராயணம் செய்தார்.
#WATCH Former Maharashtra CM Devendra Fadnavis sang devotional songs at BJP office in Mumbai on the occasion of 'Bhoomi Pujan' of Ram Temple in #Ayodhya, Uttar Pradesh. pic.twitter.com/TXAZUNVmus
— ANI (@ANI) August 5, 2020
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும் அவரது வீட்டில் வழிபாடு நடத்தியதுடன், பூமி பூஜை நிகழ்ச்சியை தொலைக்காட்சி வாயிலாக பார்த்தார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவரது வீட்டில் வழிபாடு நடத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT