Published : 04 Aug 2020 08:49 AM
Last Updated : 04 Aug 2020 08:49 AM

தெலங்கானா மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கரோனாவினால் மரணம்- பழங்குடியினருக்காகப் போராடியவர்

முன்னாள் எம்.எல்.ஏ.யும் சிபிஐ (எம்) கட்சியின் மூத்த தலைவருமான சுண்ணம் ராஜையா கரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவருக்கு வயது 68.

ஹைதராபாத்திலிருந்து, விஜயவாடாவில் உள்ள கரோனா மருத்துவமனைக்கு அவர் மாற்றப்படும் போது இறந்து போனார். இவருக்கு மனைவி இரண்டு மகன்கள் மற்றும் மகள்கள் உள்ளனர்.

கிழக்கு கோதாவரி மண்டலத்தைச் சேர்ந்த வி.ஆர்.புரம் மண்டலத்தின் சுண்ணம்வாரி குடெம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார் ராஜையா. பத்ராசலம் தொகுதி எம்.எல்.ஏ.வாக 3 முறை இருந்தவர்.

பத்ராசலம் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் பழங்குடியினர் உரிமைகளுக்காகப் போராடினார். பழங்குடியினர் நிலத்தைக் காக்க பாடுபட்டார்.

இன்று இவருக்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x