Published : 04 Aug 2020 08:29 AM
Last Updated : 04 Aug 2020 08:29 AM
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள பல்னார் கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லா (26). இவர் தனது 12-வது வயதில் வீட்டில் இருந்து வெளியேறி நக்சல் இயக்கத்தில் இணைந்திருக்கிறார். அதன் பின்னர், அவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், குழந்தையாக இருந்த போது பார்த்த தனது தங்கையை தற்போது காண வேண்டும் என்ற ஆசை மல்லாவுக்கு சமீபத்தில் வந்துள்ளது. எனவே, ரக் ஷா பந்தன் தினத்தன்று வீடு திரும்புவது என அவர் முடிவு செய்திருந்தார். அதன்படி, நேற்று அதி
காலை தனது வீட்டுக்கு அவர் சென்றுள்ளார்.
கடந்த 14 ஆண்டுகளுக்கு பிறகு மல்லாவை பார்த்த பெற்றோரும், அவரது தங்கையும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இதனைத் தொடர்ந்து, தனது தங்கையுடன் சேர்ந்து ரக் ஷா பந்தனை மல்லா கொண்டாடினார். அதன் பின்னர், நேற்று மதியம் வீட்டில் இருந்து புறப்படுவதற்கு தயாரான மல்லாவை, அவரது தங்கை லிங்கே தடுத்து நிறுத்தினார். நக்சல் இயக்கத்துக்கு மீண்டும் திரும்ப
வேண்டாம் என்றும், காவல் நிலையத்தில் சரணடைந்து விடுமாறும் கெஞ்சினார்.
தங்கையின் அன்பில் நெகிழ்ந்து போன மல்லா, அவர் கூறியபடியே தண்டேவாடா போலீஸாரிடம் சரணடைந்தார். இதுகுறித்து அந்த மாவட்ட எஸ்.பி.அபிஷேக் பல்லவ் கூறியதாவது:
பைரம்கர் பகுதியில் நக்சல் கமாண்டர் பொறுப்பில் இருந்து வந்த மல்லா, பாதுகாப்புப் படையினருக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டவர் ஆவார். அவர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.8 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
போலீஸாரின் நடவடிக்கைகளில் பல நக்சல்கள் உயிரிழந்து வருவதைக் கண்டு மல்லாவின் தங்கை அஞ்சியிருக்கிறார். தனது சகோதரருக்கும் இவ்வாறு ஏதும் நடந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில், போலீஸில் சரணடையுமாறு கூறியிருக்கிறார். தற்போது சரணடைந்துள்ள மல்லாவின் மறுவாழ் வுக்கு தேவையான உதவிகளை அரசாங்கம் செய்யும்.
இவ்வாறு அபிஷேக் பல்லவ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT