Published : 02 Aug 2020 08:57 PM
Last Updated : 02 Aug 2020 08:57 PM

கேரளத்தில் இன்று புதிதாக 1,169 பேருக்கு கரோனா தொற்று: சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா தகவல்

திருவனந்தபுரம்

கேரளாவில் இன்று 1,169 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே சிகிச்சையில் உள்ள 688 நோயாளிகள் இத்தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். இன்று கண்டறியப்பட்ட நோய்த்தொற்றுகளில் 991 பேர் தொடர்புகள் மூலமும், 56 பேர் தொடர்புகள் அறியப்படாமலும் கண்டறியப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 43 பேரும், பிற மாநிலங்களில் இருந்து 95 பேரும் இதில் அடங்குவர் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்தார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை:

''இன்று, திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 68 வயதான விஜயலட்சுமியின் மரணம் மாநிலத்தில் கரோனா தொடர்பான இறப்பு எண்ணிக்கையை 82 ஆக உயர்த்தியுள்ளது.

மாவட்ட வாரியாக திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 377 பேர், எர்ணாகுளம் மாவட்டத்தில் 128 பேர், மலப்புரம் மாவட்டத்தில் 126 பேர், காசர்கோடு மாவட்டத்தில் 113 பேர், கோட்டயம் மாவட்டத்தில் 70 பேர், கொல்லம் மாவட்டத்தில் 69 பேர், திருச்சூர் மாவட்டத்தில் 58 பேர், கோழிக்கோடு மாவட்டத்தில் 50 பேர், இடுக்கி மாவட்டத்தில் 42 பேர், ஆலப்புழா, பாலக்காடு மாவட்டங்களில் தலா 38 பேர், பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 25 பேர், வயநாடு மாவட்டத்தில் 19 பேர், கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புகள் மூலம் தொற்று ஏற்பட்டவர்கள் விவரம்:

திருவனந்தபுரம் மாவட்டத்தில் 363 பேர், மலப்புரம் மாவட்டத்தில் 113 பேர், காசராகோடு மாவட்டத்தில் 110 பேர், எர்ணாகுளம் மாவட்டத்தில் 79 பேர், கோட்டயம் மாவட்டத்தில் 70 பேர், கொல்லம் மாவட்டத்தில் 51 பேர், திருச்சூர் மாவட்டத்தில் 40 பேர், கோழிக்கோடு மாவட்டத்தில் 39 பேர், பாலக்காடு மாவட்டத்தில் 36 பேர், ஆலப்புழா மாவட்டத்தில் 24 பேர், இடுக்கி மாவட்டத்தில் 23 பேர், பத்தனம்திட்டா மற்றும் வயநாடு மாவட்டங்களில் தலா 18 பேர், கண்ணூர் மாவட்டத்தில் 7 பேர் தொடர்புகள் மூலம் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்பு அறியப்படாத கணக்கில் மாவட்ட வாரியாக, திருவனந்தபுரம் மாவட்டத்தில் 11 பேர், எர்ணாகுளம் மாவட்டத்தில் ஏழு பேர், கண்ணூர் மாவட்டத்தில் ஐந்து பேர், மலப்புரம் மாவட்டத்தில் நான்கு பேர், பத்தனம்திட்டா மற்றும் வயநாடு மாவட்டங்களில் தலா ஒருவர், 29 சுகாதார ஊழியர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 10 கே.எஸ்.இ ஊழியர்கள் மற்றும் திருச்சூர் மாவட்டத்தில் ஒரு கே.எல்.எஃப் ஊழியர் உள்ளனர்.

இன்று நோய்த்தொற்றிலிருந்து குணமானவர்கள் மாவட்ட வாரியாக விவரம்:

கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 168 பேர், கோழிக்கோடு மாவட்டத்தில் 93 பேர், திருவனந்தபுரம் மாவட்டத்தில் 66 பேர், திருச்சூர் மாவட்டத்தில் 63 பேர், கண்ணூர் மாவட்டத்தில் 55 பேர், மலப்புரம் மாவட்டத்தில் 44 பேர், கோட்டயம் மாவட்டத்தில் 39 பேர், எர்ணாகுளம் மாவட்டத்தில் 37 பேர், இடுக்கி மற்றும் காசர்கோடு மாவட்டங்கள் தலா 30 பேர் , பாலக்காடு மாவட்டத்தில் 29 பேர், வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த 19 பேர், ஆலப்புழா மாவட்டத்தில் 15 பேர் ஆகும்.

இதுவரை, மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்றிலிருந்து 14,467 பேர் மீண்டு வந்துள்ளனர். தற்போது 11,342 நோயாளிகள் வைரஸ் தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் 1,45,777 நபர்கள், 1,35,173 பேர் தங்கள் வீடுகளில் அல்லது நிறுவனத் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் மற்றும் 10,604 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். 1,363 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 22,028 மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. தற்போது வரை, மொத்தம் 8,17,078 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், 5,215 மாதிரிகளின் முடிவுகள் காத்திருக்கின்றன. சென்டினல் கண்காணிப்பின் ஒரு பகுதியாக உயர் வெளிப்பாடு குழுக்களிடமிருந்து 1,26,042 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. மேலும் 1,541 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை.

இன்று, 30 புதிய இடங்கள் ஹாட் ஸ்பாட்களாக நியமிக்கப்பட்டன. 25 இடங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. தற்போது, ​​கேரளாவில் 497 ஹாட் ஸ்பாட்கள் உள்ளன''.

இவ்வாறு அமைச்சர் ஷைலஜா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x