மகாராஷ்டிராவில் கரோனா தொற்றிய காவல்துறையினர் எண்ணிக்கை 9,566

மகாராஷ்டிராவில் கரோனா தொற்றிய காவல்துறையினர் எண்ணிக்கை 9,566

Published on

மகாராஷ்டிரா போலீஸ் படையில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 9,566 ஆக உள்ளது.

இதில் 7,534 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது சிகிச்சயில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1929 என்று மகாராஷ்டிரா போலீஸ் துறை தெரிவித்துள்ளது.

பலியான போலீஸார் எண்ணிக்கை மட்டும் 103 என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கரோனா வைரஸ் வழிகாட்டுதல்களை மீறியதற்காக கடந்த மார்ச் 22 முதல் 2,19,975 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 லட்சத்து, 50 ஆயிரத்து 724 ஆக உள்ளது. ஒரே நாளில் தொற்று எண்ணிக்கை மேலும் 54,736 அதிகரித்துள்ளது. மேலும் 24 மணி நேரத்தில் 853 பேர் மரணமடைந்தனர்.

மொத்த பாதிப்பில் 5,67, 730 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர். 11,45, 630 பேர் குணமடைந்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in