Published : 30 Jul 2020 06:48 AM
Last Updated : 30 Jul 2020 06:48 AM

ஆந்திர மாநிலத்தில் ஒரேநாளில் 10 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு

ஆந்திர மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக தினமும் 7 ஆயிரத்தை தாண்டி தொற்று எண்ணிக்கை பதிவாகி வருகிறது. இந்நிலையில், நேற்று அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிவிப்பில் மாநிலம் முழுவதும் 10,093 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன்மூலம் ஆந்திராவில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 20,390 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 63,771 பேர் சிகிச்சையில் உள்ளனர். 55,406 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று மட்டும் 65 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,213 ஆக உயர்ந்துள்ளது. பல மாவட்டங்களில் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கின்றன. மற்ற நேரம் முழுவதும் ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. வாடகை கார்கள், ஆட்டோக்கள் இயங்குவதில்லை. பல்வேறு அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் ஒரேநாளில் 10 ஆயிரத்தை தாண்டி கரோனா தொற்று அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x