Published : 29 Jul 2020 03:11 PM
Last Updated : 29 Jul 2020 03:11 PM

குழந்தையின் ரத்தத்தில் பிலிருபின் அளவை கண்காணிக்கும் கருவி: எஸ்.என்.போஸ் அறிவியல் மையம் கண்டுபிடிப்பு

புதுடெல்லி

குழந்தையின் ரத்தத்தில் உள்ள பில்ருபின் அளவை கவனமாகக் கண்காணிக்க புதிய உபகரணம் ஒன்றை, கொல்கத்தாவில் உள்ள எஸ்.என்.போஸ் அடிப்படை அறிவியலுக்கான தேசிய மையம் உருவாக்கி உள்ளது.

மஞ்சள் காமாலை என்பது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உடலியல் ரீதியில் சிவப்பு ரத்த அணுக்கள் மண்ணீரலில் அழிக்கப்படும்போது, ஹீமோகுளோபினிலிருந்து பிலிருபின் என்றொரு மஞ்சள் நிறப்பொருள் உருவாகும். இது ரத்தத்தில் கலந்து, கல்லீரலுக்கு வந்து, பித்தநீர் மூலம் மலத்திலும் சிறுநீரிலும் வெளியேறும்.

ரத்தத்தில் பிலிருபின் 0.2 - 0.8 மி.கி. / டெ.லி. என்ற அளவில் இருந்தால் அது சரியான அளவு. கல்லீரல் பாதிக்கப்படும்போது பிலிருபின் வெளியேற முடியாமல், ரத்தத்தில் தேங்கும். அப்போது 2 மி.கி./ டெ.லி. என்ற அளவுக்கு மேல் கூடிவிடும். இதன் விளைவாகக் கண், தோல், நகம், சிறுநீர் ஆகியவை மஞ்சள் நிறத்துக்கு மாறும். பசியெடுக்காது. வாந்தி, வயிற்று வலி வரும். களைப்பாக இருக்கும். இதைத்தான் மஞ்சள் காமாலை என்கிறோம்.

கல்லீரலில் பிலிருபின் இரண்டு விதமாக இருக்கும். தனித்த பிலிருபின் (Free bilirubin) 0.2 0.6 மி.கி./டெ.லி. என்ற அளவிலும், இணைந்த பிலிருபின் (Conjugated bilirubin) 0.2 மி.கி. / டெ.லி. என்ற அளவிலும் இருக்கும்.

குழந்தைகளுக்குப் பிறக்கும்போதே பில்ருபின் காணப்படலாம். இது பின்னர் மறைந்துவிடும். பிறந்த குழந்தையின் ரத்தத்தில் பில்ருபின் அளவு அதிகமாக இருந்தால் மூளை சேதமடையும் வாய்ப்பும், மஞ்சள் காமாலை ஏற்படக் கூடிய வாய்ப்பும் இருப்பதால், பிறந்த குழந்தையின் ரத்தத்தில் உள்ள பில்ருபின் அளவை கவனமாகக் கண்காணிக்க வேண்டியுள்ளது.

இதற்காக புதிய உபகரணம் ஒன்றை, கொல்கத்தாவில் உள்ள எஸ்.என்.போஸ் அடிப்படை அறிவியலுக்கான தேசிய மையம் உருவாக்கி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x