Published : 29 Jul 2020 09:34 AM
Last Updated : 29 Jul 2020 09:34 AM
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டம் 370-ஐ கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது, இதற்கு நாடு முழுதும் பெரும் வரவேற்பு இருந்தது. ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளை 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது மத்திய அரசு.
இந்நிலையில் இப்படிச் செய்ததால் காஷ்மீரில் என்ன சாதிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பிய காஷ்மீர் அரசியல் தலைவர் ஓமர் அப்துல்லா, மைய நீரோட்ட அரசியல் தலைவர்களுக்கு அங்கு இடமில்லாமல் போய் விட்டது என்றார்.
இந்நிலையில் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், “மற்ற மாநிலங்கள் போல் ஜம்மு காஷ்மீரைக் கொண்டு வர வேண்டும். ஒரே நாட்டில் இரு அரசியல் அமைப்புகள் இருக்கக் கூடாது, ஜம்மு காஷ்மீர் அதற்களிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதம், பிரிவினைவாதம் வன்முறை, வளர்ச்சியின்மையினால் வறுமை, ஊழல் என்று 370ஐ நீக்குகிறோம் என்று மக்களுக்குத் தெரிவித்தனர்.
ஓராண்டு ஆகப்போகிறது. என்ன மாற்றம் ஏற்பட்டது என்ற கேள்வியை கேட்க நாம் இன்று தள்ளப்பட்டுள்ளோம். அன்னியமாகிப் போன மக்கள் இப்போது அவ்வளவாக அன்னியமாக உணர்வதில்லையா? அல்லது வன்முறை குறைந்து விட்டதா? முதலீடுகள் திடீரென இங்கு வந்து குவிந்து விட்டதா? ஊழல் குறைவாக உள்ளது, அல்லது ஆட்சி நிர்வாகம் மேம்பாடு அடைந்து விட்டதா? அரசியல் சாசனம் 370 காரணமாக காஷ்மீரி பண்டிட்கள் உள்ளே வர முடியவில்லை என்று கூறினர், ரத்து செய்ததற்குப் பிறகு அவர்கள் பெரிய அளவில் வந்து விட்டார்களா? உண்மை என்னவெனில் எந்த ஒரு கோரலும் ஆய்வுச் சோதனைக்கு முன் நிற்காது என்பதே.
4ஜி இண்டெர்நெட் ஏன் தடைசெய்யப்பட்டது என்ற கேள்விக்கு மத்திய அரசே, ‘வன்முறை அதிகமாகிவிட்டது’ என்று ஒப்புக் கொண்டுள்ளது.” இவ்வாறு கூறினார் ஓமர் அப்துல்லா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT