Published : 26 Jul 2020 08:52 AM
Last Updated : 26 Jul 2020 08:52 AM
மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தின் ஜுனார்தியோ பகுதியைச் சேர்ந்த 6 மாணவிகள் அப்பகுதியில் உள்ள பென்ச் நதிக் கரைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இவர்களில் மேகா ஜாரே, வந்தனா திரிபாதி என்ற 2 மாணவிகள் மட்டும் செல்ஃபி எடுக்கும் மோகத்தில்நீரோட்டமுள்ள ஆற்றின் நடுவே சென்றுள்ளனர். அங்குள்ள பாறைமீது நின்று அவர்கள் தங்கள் ஸ்மார்ட் போனில் செல்ஃபி எடுத்துள்ளனர். இந்நிலையில் திடீரெனவெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் மாணவிகள் இருவரும்பாறை மீது நின்றபடி செய்வதறியாது தவித்தனர். உடனே கரையில்இருந்த மாணவிகள் பதறியடித்து போலீஸாருக்கு தகவல் தெரி வித்தனர்.
இதன் பேரில் அங்கு விரைந்து சென்ற 10-க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் உள்ளூர் மக்கள் மாணவிகளை மீட்கும் துணிகர முயற்சியில் ஈடுபட்டனர். கடும்போராட்டத்துக்கு பிறகு அம்மாணவிகளை மீட்டனர்.
இணைய தளத்தில் புகழ்பெற வேண்டும் என்ற ஆசையில் உலகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பலர் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும் சம்பவங்கள் அவ்வவ்போது நிகழ்ந்து வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT