Published : 25 Jul 2020 04:13 PM
Last Updated : 25 Jul 2020 04:13 PM

கரோனா தடுப்பு; விரைவு ஒழுங்குமுறைப் பணித்திட்டம்: உயிரி தொழில்நுட்பத்துறை வெளியீடு

புதுடெல்லி

கரோனா தடுப்புக்கான விரைவு ஒழுங்குமுறைப் பணித்திட்டத்தை உயிரி தொழில்நுட்பத்துறை வெளியிட்டுள்ளது.

கரோனா வைரஸ் எனப் பொதுவாக அறியப்படும் கடுமையான தீவிர சுவாச நோய்க்குறி கரோனாவைரஸ் -2 (சார்ஸ்-கோவ்-2), முதன் முதலில் 2019 டிசம்பர் மாதம் சீனாவின் வூகானில் கண்டறியப்பட்டது. அந்த கோவிட்-19 நோயின் தாக்கம் 2020 ஜனவரியில் வெகுவாகப் பரிவியது. உலக சுகாதார அமைப்பு , சர்வதேச அளவில் கவலைக்குள்ளாக்கும் பொது சுகாதார நெருக்கடி இது என பிரகடனப்படுத்தியது.

அபாய அளவிலான பரவலும், தீவிரமும் பெரும் கவலையை அளித்த நிலையில், உலக சுகாதார அமைப்பு இதை சர்வதேசப் பரவல் பெருந்தொற்று என 2020 மார்ச்சில் அறிவித்தது.

கோவிட்-19 ஏற்படுத்திய சுகாதாரச் சவால்களைச் சமாளிக்க, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின், உயிரி தொழில்நுட்பத்துறை (டிபிடி), நோய் கண்டறிதல், சிகிச்சை, மருந்துகள், தடுப்பூசிகள் ஆகியவற்றை மேம்படுத்த தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.

ஆராய்ச்சி நடவடிக்கை, தொழில்நுட்பம் சார்ந்த தலையீடுகள் ஆகியவற்றை விரைவாக மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை உயிரி தொழில்நுட்பத்துறை எடுத்துள்ளது. கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கையைத் தூண்டி, எளிதாக்கும் மிக முக்கியமான முயற்சியாக, உயிரி தொழில்நுட்பத்துறை விரைவு மீட்பு ஒழுங்குமுறை வரையறைகளை அறிவிக்கைகளாக வெளியிட்டுள்ளது.

• கோவிட்-19 தொற்றைச் சமாளிப்பதற்கான விரைவு மீட்பு ஒழுங்குமுறை வரையறை, தடுப்பு மருந்துகளை உருவாக்குதல், நோய் கண்டறிதல், முற்காப்பு மற்றும் சிகிச்சைக்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்து, அனுமதிக்க 20.03.2020 அன்று வெளியிடப்பட்டது.

• கோவிட்-19 மாதிரிகளை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நோக்கத்துக்கு பயன்படுத்துவதற்கான, பரிசோதனைக்கூட உயிரிப் பாதுகாப்பு குறித்த இடைக்கால வழிகாட்டு ஆவணம் 08.04.2020

அன்று வெளியிடப்பட்டது.
• கோவிட்-19 தொற்றைச் சமாளிப்பதற்கான விரைவு மீட்பு ஒழுங்குமுறை வரையறை தடுப்பூசி உருவாக்குதல்; கோவிட்-19க்கான தடுப்பூசி மறுசீரமைப்புக்கான, முன் மருத்துவ நச்சுத் தன்மையைக் கண்டறிவதற்கான ஆய்வுகள் குறித்த விண்ணப்பங்களை ஆய்வு செய்தல், 26.05.2020 அன்று வெளியீடு.

கோவிட்-19 குறித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கையை விரைவுபடுத்த, மரபணு கையாளும் ஆய்வுக்குழு உயிரி தொழில்நுட்பத்துறையில் செயல்படுகிறது. அது இதுவரை விரைவு ஆய்வு அடிப்படையில், 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்துள்ளது.

இந்த விண்ணப்பங்கள், பல்வேறு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கோவிட்-19 மருத்துவ மாதிரிகள், சார்ஸ்-கோவ்-2 தனிப்பொருள்கள், இடைநிலை செயல்முறைகள் ஏற்றுமதி, இறக்குமதி, மாறுதல், பெறுதல் தொழில் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன. கோவிட்-19 நோய் கண்டறிதல், தடுப்பு சிகிச்சைத் தளங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகளுக்கு இவை எடுத்துக் கொள்ளப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x