Published : 25 Jul 2020 08:49 AM
Last Updated : 25 Jul 2020 08:49 AM
ஆந்திராவில் தினமும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு ஏற்படுகிறது. தினமும் 60-க்கும் மேற்பட்டோர் இந்த தொற்றால் மரணமடைந்து வருகின்றனர். கரோனா பரவலை தடுக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் மக்கள் தாமாகவே முன்வந்து கரோனா பரிசோதனை செய்துகொள்கின்றனர். ஆனால், சிலர் போலி முகவரி, செல்போன் எண்களை கொடுத்து பரிசோதனை செய்து கொள்கின்றனர். இதனால் இவர்களில் தொற்று இருப்பது உறுதியானால், இவர்களை கண்டுபிடிப்பது சிரமமாகி உள்ளது. இதுபோல திருப்பதி நகரில் மட்டும் 236 பேரின் உண்மை முகவரி தெரியாமல் மருத்துவம், நகராட்சி, போலீஸ் துறையினர் அவர்களை கண்டு பிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திராவில் விசாகப்பட்டினம், குண்டூர், விஜயவாடா, நெல்லூர், சித்தூர் ஆகிய பல நகரங்களிலும் இதே நிலை உள்ளது.
தெலங்கானா மாநிலத்திலும் இதுவரை சுமார் 2000-க்கும் அதிகமானோர் போலி முகவரி மற்றும் தொலைபேசி எண்களை கொடுத்து மருத்துவமனைகளுக்கு செல்லாமல் வெளியில் திரிவதாகக் கூறப்படுகிறது. போலி முகவரி கொடுத்துவிட்டு சிகிச்சைக்கு செல்லாமல் வெளியில் திரிபவர்களால் கரோனா பாதிப்பு பரவும் என்பதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT