Published : 25 Jul 2020 07:11 AM
Last Updated : 25 Jul 2020 07:11 AM

30 விநாடிகளில் கரோனா டெஸ்ட்: இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து பரிசோதனை ‘கிட்’ கண்டுபிடிக்க திட்டம்

புதுடெல்லி

சீனாவில் இருந்து பரவிய கரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் தொற்றைக் கண்டறிய கருவிகள் வந்தாலும், அதன் முடிவுகள் வர கால தாமதம் ஏற்பட்டது. அத்துடன், பரிசோத னைக்கான செலவும் அதிகமாக உள் ளது. இந்நிலையில், இஸ்ரேலும் இந்தி யாவும் இணைந்து புதிய தலைமுறைக் கான ‘கோவிட்-19’ பரிசோதனை கிட் தயாரிக்க திட்டமிட்டுள்ளன.

இந்த கிட் தயாரிப்பில் செயற்கை நுண்ணறிவு (ஆர்டிபிஷியல் இன்டலி ஜென்ஸ்-ஏஐ) மற்றும் இயந்திரவியல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அத்துடன், 30 விநாடிகளுக் குள் அனைத்து வழிமுறைகளையும் முடித்து முடிவு அறியும் வகையில் இந்த கிட் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வகையிலான கிட் கண்டு பிடிக்கும் பணிகள் இந்தியாவில் நடை பெறும். ஆராய்ச்சியில் வெற்றி கிடைத் தால், இந்தியாவிலேயே கருவிகள் தயா ரிக்கப்படும். அதன்பிறகு இஸ்ரேலும் இந்தியாவும் இணைந்து உலகம் முழுவதும் விற்பனை செய்யும்.

இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுவதற் காக இஸ்ரேல் பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் (ஆர் எண்ட் டி) விஞ்ஞானிகள், தொழில் நுட்ப வல்லுநர்கள் அடுத்த வாரம் சிறப்பு விமானத்தில் இந்தியா வருகின் றனர். இஸ்ரேல் ஆராய்ச்சி குழுவினர் பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் கே.விஜயராகவன் தலைமையிலான ஆராய்ச்சி குழுவின ருடன் இணைந்து எய்ம்ஸ் மருத்துவ மனையில் 2 வாரங்கள் தீவிர ஆராய்ச் சியில் ஈடுபட உள்ளனர்.

இந்தக் கருவியைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில், குரல் பரிசோதனை, மூச்சுப் பரிசோதனை, வெப்ப அளவு பரிசோதனை, வாசனை அறியும் பரிசோ தனை போன்ற அனைத்து நவீன தொழில்நுட்பங்களும் அடங்கும் என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை ஆர் அண்ட் டி பிரிவின் தலைவர் டேனி கோல்ட் தெரிவித்துள்ளார்.

ஏஐ தொழில்நுட்பத்தை அடிப்படை யாகக் கொண்டு ஆன்லைன் குரல் பரிசோதனை எடுக்கப்படும். மூச்சுவிடும் பரிசோதனை, ‘டெர்ரா ஹெட்ஸ்’ அலை களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும்.

நோயாளியின் உமிழ்நீர் மாதிரியை எடுத்து பயோகெமிக்கல் முறையில் பரிசோதனை நடத்தி, வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க ‘ஐசோதெர்மல்’ பரிசோதனை நடத்தப் படும். இதுபோல் அனைத்து அம்சங் களையும் உள்ளடக்கிய பரிசோதனை கிட் தயாரிக்க இரு நாடுகளும் திட்டமிட் டுள்ளன. இந்த கருவி மூலம் வீட்டிலும் பரிசோதனை செய்து 30 விநாடிகளுக் குள் தொற்றை அறியலாம்.

இந்த கருவி மூலம் ஒருவருக்கு பரி சோதனை செய்ய 10 டாலருக்கும் குறை வாகவே செலவாகும். இது ஆய்வுக்கூடங் களில் நடத்தப்படும் பரிசோதனைக் கான செலவில் ஒரு சிறு தொகைதான் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x