Published : 23 Jul 2020 05:52 PM
Last Updated : 23 Jul 2020 05:52 PM

ராணுவத்தில் இனி பெண் அதிகாரிகள் ஓய்வுக்காலம் வரை பணியாற்றலாம்: பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி

புதுடெல்லி

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகள் அவர்களின் ஓய்வுக்காலம் வரை பணியாற்ற முறைப்படியான அரசு அங்கீகார அனுமதிக் கடிதத்தை இன்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் ராணுவத்தில் மிகப்பெரும் பொறுப்புகளை ஏற்பதற்கான அதிகாரம் பெண் அதிகாரிகளுக்குக் கிடைக்கிறது. இந்திய ராணுவத்தின் அனைத்துப் பத்து பிரிவுகளிலும் குறுகிய கால சேவையில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு ஓய்வுக்காலம் வரை பணியாற்றும் அனுமதியை இந்த ஆணை வழங்குகிறது.

அதாவது ராணுவ விமானப்பாதுகாப்பு (AAD), சிக்னல்கள், பொறியாளர்கள், ராணுவ விமானப்போக்குவரத்து, மின்னணுவியல் மற்றும் இயந்திரப் பொறியாளர்கள் (EME), ராணுவச் சேவைப்படை (ASC), ராணுவ தளவாடப்படை (AOC) மற்றும் புலனறிவுப்படை ஆகிய பிரிவுகளோடு தற்போது இருக்கும் நீதிபதி மற்றும் அட்வோகேட் ஜெனரல் (JAG) மற்றும் ராணுவக் கல்விப்படை ஆகிய பிரிவுகளிலும் இனி பெண் அதிகாரிகள் தங்களின் ஓய்வுக்காலம் வரை பணியாற்றலாம்.

ராணுவத் தலைமையகம் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிகளுக்கு நிரந்தரப் பணித்தேர்வு வாரியத்தின் தேர்வை நடத்துவதற்கான முன்தயாரிப்பு நடவடிக்கைகள் பலவற்றை முன்கூட்டியே எதிர்பார்த்து எடுத்தது. குறுகியகாலச் சேவையில் உள்ள அனைத்து பெண் அதிகாரிகளும் ஓய்வுக்காலம் வரை பணியாற்றலாம் என்ற தங்கள் வாய்ப்பைத் தேர்ந்தெடுத்து தேவைப்படும் ஆவணங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்த உடனேயே தேர்வு வாரியத்தின் கால அட்டவணை வெளியிடப்படும்.

இந்திய ராணுவம் நாட்டுக்காக சேவை ஆற்றுவதில் பெண் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து வீரர்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்கவேண்டும் என்பதில் உறுதிப்பாட்டுடன் இருக்கிறது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x