Published : 23 Jul 2020 04:55 PM
Last Updated : 23 Jul 2020 04:55 PM
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் மருத்துவமனை ஒன்றில் கரோனா நோய்க்கு பெண்மணி ஒருவர் பலியானார், ஆனால் இவரது உடல் 3 மணி நேரமாக கண்டு கொள்ள ஆளில்லாமல் சிகிச்சை வார்டில் கிடந்தது அங்கு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஆனால் மருத்துவமனையின் நிர்வாக அலுவலர் டாக்டர் கோபிசந்த் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து 15 நிமிடங்களில் உடல் அகற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
“இந்த நோயாளி செவ்வாய் நள்ளிரவு தாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் இவரை புதன் காலை பார்த்தனர். காலை 8.30 மணியளவில் அவர் வாந்தி எடுத்தார், பிறகு 9 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. 15 நிமிடங்களில் அவரது உடல் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது” என்று டாக்டர் கோபிசந்த் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, “ஆண் நர்ஸ்கள் பிபிஇ கவச உடைகள் அணிந்து உடலை அகற்றினார்கள், அதற்கு கொஞ்சம் கால அவகாசம் எடுத்தது, 15 நிமிடங்கள் ஆனது, 3 மணி நேரமெல்லாம் ஆகவில்லை” என்று குற்றச்சாட்டை மறுத்தார்.
அதே வார்டில் இருந்த கருத்தரித்த இன்னொரு பெண் இறந்த பெண் உடல் கீழே கிடந்ததை வீடியோ எடுத்துள்ளார்.
மருத்துவ அதிகாரி டாக்டர் ஷோபாவும் குற்றச்சாட்டை மறுத்து 15 நிமிடங்களில் அகற்றியதாகக் கூறினார்.
“நாங்கள் இது தொடர்பாக விசாரணை செய்தோம், இறந்த பெண் கரோனா பாசிடிவ். எனவே ஊழியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர். பாதுகாப்பு கவச உடைகள் அணிந்து பெண்ணின் உடலை அங்கிருந்து அகற்ற 15 நிமிடங்கள் ஆனது. வார்டிலிருந்து உடல் அகற்றப்பட்டது. 3 மணி நேரமெல்லாம் ஆகவில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT