Published : 22 Jul 2020 08:05 PM
Last Updated : 22 Jul 2020 08:05 PM
இந்தியா 100 நாடுகளுக்கு மருந்துகளை அனுப்பி உதவுகிறது என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென் ஜஸ்டர் பாராட்டு தெரிவித்தார்.
அமெரிக்க – இந்திய வர்த்தக கவுன்சில் நிறுவப்பட்டு, இந்த ஆண்டுடன் 45 ஆண்டுகள் ஆகின்றன. இந்தநிலையில் அமெரிக்க – இந்திய வர்த்தக கவுன்சில் ஏற்பாடு செய்துள்ள ஐடியாஸ் மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. நடப்பாண்டின் இந்தியா ஐடியாஸ் உச்சி மாநாட்டின் மையப் பொருள் “சிறப்பான வருங்காலத்தை கட்டமைத்தல்” என்பதாகும்.
இந்திய, அமெரிக்க அரசுகளின் கொள்கை வகுப்பாளர்கள், உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் வர்த்தக, சமூக துறைகளின் கருத்தாளர்கள், தலைவர்கள் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ, வெர்ஜினியா மாகாண செனட்டர் மற்றும் செனட் இந்தியா காக்கசின் துணைத் தலைவர் மார்க் வார்னர், பிரிட்டனுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே ஆகியோர் முக்கிய உரையாற்றுகின்றனர்.
இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பு, பெருந்தொற்றுக்கு பிறகான உலகில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளின் எதிர்காலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் இந்தியா 100 நாடுகளுக்கு மருந்துகளை அனுப்பி உதவுகிறது எனஇந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென் ஜஸ்டர் பாராட்டு தெரிவித்தார். அவர் பேசுகையில் ‘‘இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்டகால நட்புறவு உண்டு. இருநாடுகளும் உரிய முறையில் ஒத்துழைப்பு அளித்து வருகின்றன. அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி இடையே உரிய சந்திப்புகளும், பேச்சுவார்த்தையும் நடந்து வருகின்றன. இது இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும்’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT