Published : 21 Jul 2020 11:59 AM
Last Updated : 21 Jul 2020 11:59 AM
மத்திய அரசு கொண்டு வந்த 3 அவசரச் சட்டங்களை எதிர்த்தும், தொடரும் பெட்ரோல், டீசல் விலைகளை எதிர்த்தும் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இன்று பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர் பேரணி மேற்கொண்டனர்.
விவசாயிகள் விளைபொருள் வாணிப மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் வசதி) அவசரச் சட்டம் 2020.
விலை உத்தரவாத மற்றும் வேளாண் சேவைகள் அவசரச் சட்டம், 2020,
அத்தியாவசிய பொருட்கள் திருத்த அவசரச் சட்டம், 2020.
ஆகிய 3 அவசரச்சட்டங்களையும் பெட்ரோல் டீசல் விலைகளை எதிர்த்தும் லூதியானாவில் ட்ராக்டர் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டம் தொடர்பாக விவசாய அமைப்பு ஒன்றின் தலைவர் சரப்ஜித் சிங் ஏ.என்.ஐ செய்தி ஏஜென்சியிடம் கூறும்போது, “மத்திய அரசின் 3 அவசரச் சட்டங்களை எதிர்த்துப் போராடுகிறோம்.
எல்லா விவசாயிகளும் நஷ்டமடைகின்றனர். மண்டிகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வர்த்தகத்தில் ஈடுபட மத்திய அரசு உதவுகிறது. எங்களுக்கு உதவவில்லை.
குறைந்தபட்ச ஆதரவு விலையைத் திட்டத்தை கைவிடுதல் முறையால் விவசாயிகள் கடும் நஷ்டமடைகின்றனர். மண்டிகளின் மூலம் பஞ்சாப் அரசுக்கு வரும் ரூ.40,000 கோடி வருவாய் நின்று விடும். விவசாயிகள் ஏற்கெனவே தற்கொலை செய்து கொள்கின்றனர்” என்றார்.
எனவே இந்த அவசரச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் சால மறியல் போராட்டம்தான். பெட்ரோல் டீசல் விலைகளையும் குறைத்தாக வேண்டும் என்கிறார் குருசரண் சிங் என்ற மற்றொரு விவசாயி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT