Published : 21 Jul 2020 10:54 AM
Last Updated : 21 Jul 2020 10:54 AM
இந்தியாவில் நேற்று (ஜூலை 20) ஒரே நாளில் 37. 148 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,55,191 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 587 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 28,084 ஆனது.
இந்தியாவில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 2 ஆயிரத்து 529 ஆக உள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 24 ஆயிரத்து 577 ஆக உள்ளது. அதாவது குணமடைந்தோர் விகிதம் 62.72% ஆக உள்ளது. உறுதி செய்யப்பட்ட கரோனா நோயாளிகளில் அயல்நாட்டினரும் உண்டு.
தொடர்ச்சியாக 6வது நாளாக கோவிட்-19 தொற்றுக்கள் 30,000த்திற்கும் அதிகமாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 587 பேர் மரணமடைந்ததில் மகாராஷ்ராவில் 176, கர்நாடகாவில் 72, தமிழகத்தில் 70, ஆந்திராவில் 54, உ.பி.யில் 46, மேற்கு வங்கத்தில் 35, டெல்லியில் 35, குஜராத்தில் 20, ம.பி.யில் 17, ஜம்மு காஷ்மீரில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
ராஜஸ்தானில் 9, பஞ்சாபில் 8, தெலங்கானாவில் 7, ஹரியாணா, ஒடிசாவில் முறையே 6, ஜார்கண்டில் 4, உத்தராகண்டில் 3, திரிபுரா, மேகாலயாவில் தலா 2 பேர், அஸாம், கோவா, சட்டிஸ்கர், கேரளா, புதுச்சேரியில் முறையே ஒருவர் மரணமடைந்துள்ளனர்.
ஐசிஎம்ஆர் தகவலின் படி இதுவரை 1 கோடியே 43 லட்சத்து 81 ஆயிரத்து 303 கரோனா மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திங்களன்று மட்டும் 3,33,395 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டன.
மொத்தம் 28,804 கரோனா மரணங்களில் மகாராஷ்ட்ராவில் மட்டும் 12,030 பேர் அதிகபட்சமாக மரணமடைந்துள்ளனர். அடுத்தபடியாக டெல்லியில் 3,663 , தமிழ்நாட்டில் 2,551, குஜராத்தில் 2,162, கர்நாடகாவில் 1,403, உ.பி.யில் 1,192, மேற்கு வங்கத்தில் 1,147, ம.பி.யில் 738, ஆந்திராவில் 696, ராஜஸ்தானில் 568, தெலங்கானாவில் 422, ஹரியாணாவில் 355, பஞ்சாபில் 262, ஜம்மு காஷ்மீரில் 254, பிஹாரில் 217, ஒடிசாவில் 97, அஸாமில் 58, உத்தர்கண்டில் 55, ஜார்கண்டில் 53, கேரளாவில் 43, புதுச்சேரியில் 29, சத்திஸ்கரில் 25,கோவாவில் 23, சண்டிகரில் 12, ஹிமாச்சலில் 11, திரிபுராவில் 7, மேகாலயாவில் 4, அருணாச்சலப்பிரதேசத்தில் 3, தாத்ரா, நாகர்ஹவேலி, டாமன், டையு மற்றும் லடாக் ஆகியவற்றில் முறையே 2 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.
இதில் 70% மரணங்கள் பிற உடல்நிலைக் கோளாறுகளினால் கரோனாவும் சேர சிக்கலாகி ஏற்பட்டதாகும் என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளாது.
மகாராஷ்ட்ராவில் 3 லட்சத்து 18,695 பேர் பாதிக்கப்பட அடுத்த இடத்தில் தமிழகம் 1,75,678 பாதிப்புகளுடன் 2வதாக உள்ளது. டெல்லியில் 123,747, கர்நாடகாவில் 67,420, ஆந்திராவில் 53,724, உ.பி.யில் 51,160, குஜராத்தில் 49,353, தெலங்கானாவில் 46,274.
மேற்கு வங்கத்தில் 44,679, ராஜஸ்தானில் 30,390, பிஹாரில் 27,646, ஹரியானாவி 26,858, அசாமில் 25,382, ம.பியில் 23,310., ஒடிசாவில் 18,110, ஜம்மு காஷ்மீரில் 14,650, கேரளாவில் 13,274, பஞ்சாபில் 10,510, ஜார்கண்டில் 5,756, சத்திஸ்கரில் 5561, உத்தர்கண்டில் 4,642, கோவாஇல் 3,853, திரிபுராவில் 3079, புதுச்சேரியில் 2092, மணிப்பூரில் 1925, ஹிமாச்சலில் 1,631, லடாக்கில் 1,195 பேர், நாகாலாந்தில் 1021, அருணாச்சலைல் 790, சண்டிகரில் 737, தாத்ரா நாகர் ஹவேலி, டாமன், டையு சேர்ந்து 684 பேர், மேகாலயவில் 466, சிக்கிமில் 305, மிஜோரமில் 297, அந்தமான் நிகோபர் தீவுகளில் 207 என்ற எண்ணிக்கையில் இந்தியாவி பாதிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT