Published : 20 Jul 2020 07:31 PM
Last Updated : 20 Jul 2020 07:31 PM

சுயசார்பு பாரதம்; இந்தியாவில் முதலீடு செய்ய சிறந்த நேரம்: பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி

இந்தியாவில் முதலீடு செய்ய இது ஒரு சிறந்த நேரம் என்று பிரதமர் மோடி கூறினார்.

சுய சார்பு - பாரதம் பார்வையில் IBM தலைமை நிர்வாக அதிகாரி நம்பிக்கை தெரிவித்தார்; இந்தியாவில் IBM நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீட்டுத் திட்டங்கள் குறித்து பிரதமருக்கு விளக்கினார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஐபிஎம் (IBM) தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் கிருஷ்ணாவுடன் காணொலிக்காட்சி மூலம் உரையாடினார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐபிஎம்மின் உலகளாவிய தலைவரான அரவிந்த் கிருஷ்ணாவை பிரதமர் வாழ்த்தினார். இந்தியாவுடன் ஐபிஎம் (IBM) வலுவான தொடர்பு, அந்நிறுவனத்தில் 20 நகரங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றுவது, நாட்டில் அதன் மிகப்பெரிய இருப்பு ஆகியவை குறித்து அவர் குறிப்பிட்டார்,

வணிகக் கலாச்சாரத்தில் கோவிட்டின் தாக்கம் குறித்துப் பேசிய பிரதமர், ‘வீட்டிலிருந்தபடியே வேலை’ என்பது பெரிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்தத் தொழில்நுட்ப மாற்றம் சீராக இருப்பதை உறுதி செய்வதற்காக உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் ஒழுங்குமுறைச் சூழலை வழங்குவதில் அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஐபிஎம் (IBM) தனது 75 சதவீத ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பற்கான சமீபத்திய முடிவில் தொடர்புடைய தொழில்நுட்பங்கள் மற்றும் சவால்கள் குறித்தும் அவர் விவாதித்தார்.

இந்தியாவில் 200 பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவுப் (AI) பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் CBSE உடன் இணைந்து ஐபிஎம் (IBM) ஆற்றிய பங்கை பிரதமர் பாராட்டினார். நாட்டில் தொழில்நுட்ப மனநிலையை மேலும் மேம்படுத்துவதற்காக, ஆரம்ப கல்வித் திட்டத்திலேயே செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் போன்ற துறைகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த அரசாங்கம் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.

தொழில்நுட்பம் மற்றும் தரவு பற்றிய கற்பித்தல் இயற்கணிதம் போன்ற அடிப்படைத் திறன்களின் பிரிவில் இருக்க வேண்டும், ஆர்வத்துடன் கற்பிக்கப்பட வேண்டும், ஆரம்ப காலங்களிலேயே அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று ஐபிஎம் (IBM) தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

இந்தியாவில் முதலீடு செய்ய இது ஒரு சிறந்த நேரம் என்று பிரதமர் எடுத்துரைத்தார். தொழில்நுட்பத் துறையில் நடைபெற்று வரும் முதலீடுகளை நாடு வரவேற்று ஆதரிக்கிறது என்று அவர் கூறினார். உலகம் மந்த நிலையைக் காணும்போது, இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

ஒரு தன்னிறைவு பெற்ற இந்தியாவின் பார்வையுடன் உலகளவில் தடைகள் ஏற்படாமல் தாக்குபிடிக்க கூடிய திறமையான உள்ளூர் விநியோகச் சங்கிலியை உருவாக்க முடியும் என தெரிவித்தார். இந்தியாவில் ஐபிஎம் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீட்டுத் திட்டங்கள் குறித்து ஐபிஎம் தலைமை நிர்வாக அதிகாரி பிரதமருக்கு விளக்கினார். சுயசார்பு பாரதத்தின் பார்வை குறித்து அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த ஆறு ஆண்டுகளில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சிறந்த தரமான சுகாதாரப் பாதுகாப்பு மக்களுக்கு எட்டக்கூடியதாக இருப்பதை உறுதி செய்வதற்கும் அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து பிரதமர் பேசினார். சுகாதாரத் துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க அளவிலான செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவிகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளையும், நோய் முன்கணிப்பு மற்றும் பகுப்பாய்விற்கான சிறந்த மாதிரிகளை உருவாக்குவதற்கான வழிவகைகளையும் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார். ஒருங்கிணைந்த, தொழில்நுட்ப மற்றும் தரவு சார்ந்த சுகாதார அமைப்பின் வளர்ச்சியை நோக்கி நாடு நகர்கிறது, இது மக்களுக்கு மலிவானது மற்றும் தொந்தரவில்லாதது என்பதை சுட்டிகாட்டினார்.

சுகாதாரப் பார்வையை முன்னெடுப்பதில் ஐபிஎம் (IBM) முக்கியமான பங்கு வகிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார். ஐபிஎம் (IBM) தலைமை நிர்வாக அதிகாரி ஆயுஷ்மான் பாரதத்திற்கான பிரதமரின் பார்வையைப் பாராட்டினார். நோய்களை முன்கூட்டியே அடையாளம் காண தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றி பேசினார்.

தரவுப் பாதுகாப்பு, இணையத் (Cyber) தாக்குதல்கள், தனிநபர்களின் ரகசியம் பேணல் மற்றும் யோகாவின் சுகாதார நன்மைகள் போன்றவை விவாதத்தின் பிற பகுதிகளில் அடங்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x