Published : 16 Jul 2020 08:42 PM
Last Updated : 16 Jul 2020 08:42 PM

அரைமணி நேரத்தில் ஆண்டிஜென்- பிசிஆர் சோதனை முடிவுகள்: சுகாதார அமைச்சகம் தகவல்

புதுடெல்லி

கோவிட்-19 பரிசோதனைக்கான, மிகச் சிறந்த விரைவு ஆண்டிஜென்- பிசிஆர் சோதனை முடிவுகள் அரைமணி நேரத்தில் தெரிந்து விடுவதால், தொற்று பரவலைக் கட்டுப்படுத்த உதவுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

“பரிசோதித்தல், தடம் அறிதல், சிகிச்சை அளித்தல்” என்ற உத்திப்படி மத்திய அரசு, கொவிட்-19 தொற்றுக்கான பரிசோதனைகளை அதிகரிக்குமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இதன் விளைவாக இந்தியாவில் பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஐசிஎம்ஆர் நெறிமுறைகளின்படி பரிசோதனைகள் அதிகரிப்பட்டுள்ளதால், தொற்றை துவக்கத்திலேயே கண்டறிய முடிகிறது.

கோவிட்-19 பரிசோதனைக்கான, மிகச் சிறந்த விரைவு ஆண்டிஜென்-பிசிஆர் சோதனையும் இதில் அடங்கும். அரைமணி நேரத்தில் சோதனை முடிவுகள் தெரிந்து விடுவதால், தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் இது பெரிதும் உதவுகிறது.

நாள்தோறும் மேற்கொள்ளப்படும் கோவிட்-19 மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3,26,826 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரையில் மொத்தம் 1,27,39,490 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 10 லட்சத்திற்கு 9231.5 என்ற எண்ணிக்கையில் இந்தியாவில் சோதனைகளின் விகிதம் இருக்கிறது.

நம் நாட்டில் மருத்துவப் பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால், கொவிட்-19 பரிசோதனைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அரசு ஆய்வகங்கள் 874, தனியார் ஆய்வகங்கள் 360 என மொத்த

ஆய்வகங்களின் எண்ணிக்கை 1234 ஆக உயர்ந்துள்ளது. இதன் விவரங்கள்:

· உடனடி RT PCR அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள் : 635 (அரசு: 392 + தனியார்: 243)

· TrueNat அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள் : 499 (அரசு: 447 + தனியார்: 52)

· CBNAAT அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள் : 100 (அரசு: 35 + தனியார்: 65)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x