Published : 16 Jul 2020 04:20 PM
Last Updated : 16 Jul 2020 04:20 PM
நிலத்தை ஆக்ரமித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் மத்திய பிரதேச மாநிலத்தின் குணா மாவட்ட புறநகர்ப்பகுதியில் அரசுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்ரமித்ததாக தலித் தம்பதியினரை போலீஸார் அடித்து வேனில் ஏற்ற முயன்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வளையவர பெரிய சர்ச்சை உருவெடுத்துள்ளது.
பெற்றோரை போலீஸ் அடித்து இழுத்துச் செல்வதைப் பார்த்த அவர்களது குழந்தைகள் கதறி அழுத காட்சி அனைவரையும் உலுக்கியுள்ளது.
இந்தச் சம்பவத்தை அடுத்து ஆளும் சிவராஜ்சிங் சவுகான் தலைமை ம.பி. அரசு உயர்மட்ட விசாரணைக்குழு அமைத்துள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ம.பி. முதல்வர் கமல்நாத்தும் விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து குணா மாவட்ட ஆட்சியர், ஐஜி, எஸ்பி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
“இது போன்ற கொடூரமான செயலை பொறுத்துக் கொள்ள முடியாது. இந்தச்செயலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதாவது அரசு கல்லூரி கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தை தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம்குமார் ஆஹிர்வார், 38, சாவித்ரி தேவி,35 ஆகியோர் ஆக்ரமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு ஆட்சியர், எஸ்பி. வந்தனர், அப்போது உண்மையான நில ஆக்ரம்பிப்பாளரான கப்பு பரிதி சம்பவ இடத்திலிருந்து தலைமறைவானார். அஹிர்வார் குடும்பத்தினர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றனர், இவர்கள் தற்போது மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இருவரின் உடல்நிலையும் தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீக்கப்பட்ட கலெக்டர் பெயர் விஸ்வநாதன்.
இந்த நிலம் பற்றி குடும்பத்தினர் கூறும்போது, தாங்கள் இந்த நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து பல ஆண்டுகள் விவசாயம் செய்து வருவதாகவும் கூறினர். ஆனால் இப்போது கலெக்டர் போலீஸ் நடவடிக்கையினால் பயிர்கள் சேதம் செய்யப்பட்டுள்ளன, இதனால் நாங்கல் கடனாளியாகி விட்டோம் என்று கூறும் குடும்பத்தினர், வாழ்க்கையை முடித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்தனர்.
தம்பதியை போலீஸார் இழுத்துச் செல்லும் வீடியோவை பகிர்ந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தன் ட்விட்டரில், “நம் போராட்டமே இந்த மனநிலையையும், அநீதியையும் எதிர்த்துத்தான்” என்று பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்த பாஜக எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியா, ”இப்படிப்பட்டக் கொடுமையை இழைத்தவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும்” என்றார்.
முன்னாள் முதல்வர் கமல்நாத் கூறும்போது, “ஜூலை 15ம் தேதி தலித் தம்பதியை போலீஸார் அடித்து இழுத்து சென்றதும், பெண்ணை துன்புறுத்தியதும் குற்றமாகும். இதில் அவர்கள் விஷத்தை அருந்தினர்.. நிலத் தகராறு இருந்தாலும் அதனை சட்டப்பூர்வமாக தீர்க்கலாமே. ஆனால் போலீஸ் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு இருவரையும் கருணையற்ற விதத்தில் அடித்து நொறுக்குவது என்ன நீதி? ஏன் இப்படி என்றால், அவர்கள் தலித் வகுப்பினர், ஏழை விவசாயிகள் என்பதுதானே?” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT