Last Updated : 16 Jul, 2020 11:16 AM

 

Published : 16 Jul 2020 11:16 AM
Last Updated : 16 Jul 2020 11:16 AM

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 32 ஆயிரம் பேர் கரோனாவில் பாதிப்பு: உயிரிழப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது

கோப்புப்படம்

புதுடெல்லி

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸ் தொற்றால் புதிதாக 32 ஆயிரத்து 695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 606 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின் மூலம் தெரியவருகிறது.

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 68 ஆயிரத்து 876 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 12 ஆயிரத்து 814 ஆக உயர்ந்து, குணமடைந்தோர் சதவீதம் 63.23 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 146 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 606 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த உயிரிழப்பு 24 ஆயிரத்து 915 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 233 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் 86 பேர், தமிழகத்தில் 68 பேர், ஆந்திராவில் 44 பேர், டெல்லியில் 41 பேர், உத்தரப்பிரதேசத்தில் 29 பேர், மேற்கு வங்கத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர், தெலங்கானாவில் தலா 11 பேர், குஜராத்தில் 10 பேர், மத்தியப்பிரதேசத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் 8 பேர், ஹரியாணாவில் 7 பேர், அசாம் , பிஹாரில் தலா 6 பேர், ராஜஸ்தானில் 5 பேர், ஒடிசா, புதுச்சேரியில் தலா 3 பேர், ஜார்கண்ட்டில் இருவர், சண்டிகர், கேரளா, திரிபுரா, தாத்ரா நகர் ஹாவேலி, டையு டாமனில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 10,928 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 3,487 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 2,167 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 2,079 ஆகவும், அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 1,000 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 682 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 1,012 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 530ஆகவும் அதிகரித்துள்ளது.

தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 386 ஆகவும், ஹரியாணாவில் 319 ஆகவும், ஆந்திராவில் 408 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 928 பேரும், பஞ்சாப்பில் 221 பேரும் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 206பேரும், பிஹாரில் 180 பேரும், ஒடிசாவில் 77 பேரும், கேரளாவில் 35 பேரும், உத்தரகாண்டில் 50 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 11 பேரும், ஜார்க்கண்டில் 38 பேரும், அசாமில் 46 பேரும், திரிபுராவில் 3 பேரும், அருணாச்சலப் பிரதேசத்தில் 3 பேரும், மேகாலயா, தாத்ராநகர் ஹாவேலி, டையூ டாமனில் தலா இருவரும் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் 18 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 75 ஆயிரத்து 640 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,52,613 ஆக உயர்ந்துள்ளது.

2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 820ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 10,2,310 ஆகவும் அதிகரித்துள்ளது.

டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,16,993 பேராக அதிகரித்துள்ளது. 95,699 பேர் குணமடைந்துள்ளனர்.
4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 44,552 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 31,256 பேர் குணமடைந்தனர்.

ராஜஸ்தானில் 26,437 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 19,643 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 41,383 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 34,427 பேரும், ஆந்திராவில் 35,451 பேரும், பஞ்சாப்பில் 8,799 பேரும், தெலங்கானாவில் 39,342 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 11,666 பேர், கர்நாடகாவில் 47,253 பேர், ஹரியாணாவில் 23,306 பேர், பிஹாரில் 20,612 பேர், கேரளாவில் 9,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,634 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் 14,280 பேர், சண்டிகரில் 625 பேர், ஜார்க்கண்டில் 4,320 பேர், திரிபுராவில் 2,668 பேர், அசாமில் 17,807 பேர், உத்தரகாண்டில் 3,785 பேர், சத்தீஸ்கரில் 4,539 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 1,341 பேர், லடாக்கில் 1,142 பேர், நாகாலாந்தில் 902 பேர், மேகாலயாவில் 346 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாதர் நகர் ஹாவேலியில் 520 பேர், புதுச்சேரியில் 1,596 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 889 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 238 பேர், சிக்கிமில் 220 பேர், மணிப்பூரில் 1,700 பேர், கோவாவில் 2,753 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் 462 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x