Published : 14 Jul 2020 03:45 PM
Last Updated : 14 Jul 2020 03:45 PM
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், போர்க்கொடி உயர்த்திய சச்சின் பைலட் கைகளில் ஒன்றும் இல்லை, பாஜகவின் கரங்களில் அவர் வீழ்ந்து விட்டார் என்று வேதனையாகத் தெரிவித்துள்ளார்.
சச்சின் பைலட்டை துணை முதல்வர் பொறுப்பிலிருந்தும் மாநில காங். தலைவர் பொறுப்பிலிருந்தும் நீக்கிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் அசோக் கெலாட், “மத்தியப் பிரதேசத்தில் செய்ததைப் போல் ராஜஸ்தானிலும் செய்து காட்ட பாஜக விரும்பியது.
ஆனால் பாஜகவின் நோக்கங்கள் இங்கு எடுபடவில்லை. சச்சின் பைலட் மற்றும் அவருடன் சேர்ந்தவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கினோ, ஆனால் அவர்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.
பைலட் கையில் எதுவும் இல்லை, பாஜகவின் கரங்களில் அவர் சரண் புகுந்தார். பாஜகதான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது.
குதிரைப் பேரம் நடப்பது வேதனையளிக்கிறது. நாட்டில் ஜனநாயகம் மிகவும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது.
போர்க்கொடி உயர்த்தியவர்களின் கோரிக்கைக்ள் அனைத்தையும் அவசரம் அவசரமாக நிறைவேற்றினோம், அவர்கள் வேலை முடிந்து விட்டது ஆனாலும் அவர்கள் ஆட்சியைக் கவிழ்க்க திட்டமிடுகிறார்கள்.” என்றார் அசோக் கெலாட்.
ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்தும் மாநில கட்சித் தலைமைப் பதவியிலிருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார். அவருடன் 2 அமைச்சர்களும் நீக்கப்பட்டனர்.
முதல்வர் கெலாட் உடனேயே ஆளுநரைச் சந்தித்து 3 அமைச்சர்கள் நீக்க முடிவை அறிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT