Published : 14 Jul 2020 11:19 AM
Last Updated : 14 Jul 2020 11:19 AM
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,498 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 553 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கையும் 23, 727 ஆக அதிகரித்துள்ளது.
மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,06,752. சிகிச்சையில் உள்ளோர் 3,11, 565, குணமடைந்தோர் 5,71,460. மொத்த பலி எண்ணிக்கை 23,727 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 28,498, பலியானோர் எண்ணிக்கை 553. 63.02% நோயாளிகள் இதுவரை குணமடைந்துள்ளனர்.
தொடர்ந்து 5வது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 26,000த்தைக் கடந்துள்ளது. ஒரு லட்சம் கரோனா பாதிப்புகளை எட்ட 110 நாட்கள் ஆனது, ஆனால் 9 லட்சத்தைக் கடக்க 56 நாட்களே ஆகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 553 பேர் மரணமடைந்துள்ளனர். இதில் மகாராஷ்ட்ராவில் 193, கர்நாடகாவில் 73, தமிழ்நாட்டில் 66, டெல்லியில் 40, ஆந்திராவில் 37, மேற்கு வங்கத்தில் 24, உ.பி.யில் 21, பிஹாரில் 17, ராஜஸ்தானில் 15, குஜராத், ம.பி.யில் முறையே 10 பேர் மரணமடைந்துள்ளனர்.
தெலங்கானாவில் 9, காஷ்மீரில் 8, ஹரியாணாவில் 7, ஒடிஷாவில் 6, பஞ்சாபில் 5, ஜார்கண்ட், கோவாவில் முறையே 3, கேரளா, உத்தராகண்டில் முறையே 2, அஸாம், தாத்ரா, நாகர்ஹவேலி, டாமன், டையு ஆகியவற்றில் முறையே ஒருவர் மரணமடைந்துள்ளனர்
மாநிலவாரியாக மகாராஷ்ட்ராவில் பாதிப்பு எண்ணிக்கை 2,60,924. பலி எண்ணிக்கை 10,482.
தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,42,078, பலி எண்ணிக்கை 2,032.
டெல்லியில் 113,740 பேர் பாதிக்கப்பட்டதில் 3,411 பேர் மரணமடைந்துள்ளனர்.
குஜராத்தில் 42,722 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், பலி எண்ணிக்கை 2,055.
கர்நாடகாவில் பாதிப்பு எண்ணிக்கை 41,581 பலி எண்ணிக்கை 757.
உத்தரப்பிரதேசத்தில் 38,130 பேர் பாதிப்படைய பலி எண்ணிக்கை 955 ஆக உள்ளது.
மேற்கு வங்கத்தில் பாதிப்பு எண்ணிக்கை 31,448 ஆக, பலி எண்ணிக்கை 956 ஆக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT