Published : 14 Jul 2020 07:17 AM
Last Updated : 14 Jul 2020 07:17 AM
கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக வழங்கப்படும் ஃபேபிபுளு மாத்திரையின் விலையை, கிளன்மார்க் பார்மா நிறுவனம் 27 சதவீதம் குறைத்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சைக்காக கடந்த மாதம் கிளன்மார்க் பார்மா நிறுவனம் ஃபேவிபிரவிர் என்றமருந்தை ஃபேபிபுளு என்ற பெயரில் மாத்திரையாக அறிமுகம் செய்தது. அப்போது ஒரு மாத்திரையின் விலை ரூ.103 எனநிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மாத்திரையின் விலையை 27 சதவீதம் குறைத்து ரூ.75 என அந்நிறுவனம் விலை நிர்ணயம் செய்துள்ளது.
இந்தியாவில், ஃபேபிபுளு மருந்துதான், முதல் முறையாக வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்யப்பட்ட மருந்து ஆகும். இந்த மருந்தைமருத்துவர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT