Last Updated : 13 Jul, 2020 04:36 PM

 

Published : 13 Jul 2020 04:36 PM
Last Updated : 13 Jul 2020 04:36 PM

போக்குவரத்து மற்றும் வருவாய்த்துறையா.. -  'நல்ல உள்ளங்கள் புரிந்து கொள்ளும்': ஜோதிராதித்ய சிந்தியாவை கிண்டல் செய்த திக்விஜய் சிங்

மத்தியப் பிரதேச காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பாஜகவின் துருப்புச் சீட்டு என்று வர்ணிக்கப்படும் முன்னாள் காங்கிரஸ் தலைவரும் பாஜகவுக்கு தாவியவருமான ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு ஆளும் பாஜக சிவராஜ் சிங் சவுகான் ஆட்சி முக்கியமான அமைச்சர் பொறுப்புகளை வழங்கியுள்ளது.

28 புதிய அமைச்சர்களில் 20 அமைச்சர்களுக்கு அமைச்சரவையில் இடமும் 8 பேருக்கு இணை அமைச்சர் பதவியும் அளிக்கப்பட்டது. 38 அமைச்சர்கள் கொண்ட ஆட்சியில் 4 பெண் அமைச்சர்கள்.

ஜோதிராதித்ய சிந்தியா விசுவாசியான துல்சி சிலாவத் நீராதார அமைச்சகம் பெற்றார். இதோடு மீன்வளத்துறை அமைச்சகமும் இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கோவிந்த் சிங் ராஜ்புத் வருவாய் மற்றும் போக்குவரத்துத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

சிந்தியா ஆதரவாளர் டாக்டர் பிரபுராம் சவுத்ரி, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர். பிரத்யும்னசிங் தோமர் எரிசக்தி துறை, மகேந்திர சிங் சிசோடியாவுக்கு பஞ்சாயத்து மற்றும் ஊரகத்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சிந்தியாவுடன் வெளியேறிய 22 எம்.எல்.ஏ.க்களில் 14 பேருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. இவர்களில் அனைவரும் எம்.எல்.ஏ.க்கள் அல்ல, இவர்கள் இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்றால்தான் உறுப்பினர்கள் ஆக முடியும்.

முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அணியினருக்கு பொதுத்துறை, நிதி, மருத்துவம், கல்வி, கனிமவள வளர்ச்சி உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், “ஏன் சிந்தியாஜீ போக்குவரத்து மற்றும் வருவாய்த்துறை மீது இவ்வளவு ஆர்வம் காட்டினார். நல்ல உள்ளங்கள் புரிந்து கொள்ளும்” என்று கிண்டலடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x