Published : 13 Jul 2020 10:56 AM
Last Updated : 13 Jul 2020 10:56 AM
கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரிப்பகுதி, கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் பிற இடங்கள் ஆகியவற்றில் சீனப்படைகளின் நகர்வு மே தொடக்கத்தில் நிகழ்ந்தது, ஆனால் இதன் பின்னணியில் பல மாதங்கள் திட்டமிடல் இருந்ததாகவும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கே படைகளைத் திரட்ட உத்தரவிட்டதாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் வெளியான பிரத்யேக செய்திக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளதன் சுருக்கம் வருமாறு:
சீனப் படைகள் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் தங்கள் படைகள் மூலம் ஊடுருவினர். இதனால்தான் மே தொடக்கத்திலேயே வேறுபாடுகள் தோன்றின.
சம்பவங்களின் காலவர்த்தமானத்தை நோக்கும் போது இது பல மாதங்கள் திட்டமிட்ட நகர்வு என்று இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் பாங்காங் ஏரி ஆகிய பகுதிகளில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் நிலை நிறுத்தம் இந்தியப் படைகளை அங்கிருந்து பின் வாங்கச் செய்யவே என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கல்வான் பகுதியில் இருதரப்பினரும் என்று ஏற்றுக் கொண்ட பாதுகாக்கப்பட்டப் பகுதி என்பது சீனாவின் கட்டுப்பாடு எல்லை குறித்த பார்வையின் அடிப்படையில் சீனாவின் வலியுறுத்தலின் பேரில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பகுதியாகும்.
பாங்காங் ஏரிப்பகுதியில் சீனா தன் இருப்பை குறைத்துக் கொண்டு ஃபிங்கர் 5 பகுதிக்குள் இந்தியா உரிமை கோரும் பகுதியில் மேலும் ஆழமாக உள்நுழைந்தது.
ஜனவரி பிற்பகுதியிலும் பிப்ரவரி துவக்கத்திலும் லடாக் எல்லையில் இருக்கும் ஷின்ஜியாங் பகுதியில் வழக்கமான ஆண்டு பயிற்சிக்கான படைத் திரட்டல்தான் என்ற போர்வையில் சீன ராணுவம் நிலை நிறுத்தப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு முந்தைய ஆண்டுப் பயிற்சிகள் போல் அல்லாமல் எப்போதும் தங்கள் பகுதியிலேயே தொலைவில் பயிற்சி பெறுவதை வழக்கமாகக் கொண்ட சீன ராணுவம் முதல் முறையாக எல்லைக்கு அருகில் வந்தன. பொதுவாக இங்கு முன்னிலைப் பகுதியில் எல்லைப் படைகளே இருப்பது வழக்கம். இதனால்தான் ஏப்ரலிலிருந்தே பெரிய அளவில் படைத்திரட்டல் நேர்ந்துள்ளது.
சீன அதிபர் ஜின்பிங்கின் உத்தரவு:
ஜனவரி 2020-ல் சீன அதிபர் ஜின்பிங் பயிற்சி படைத்திரட்டல் உத்தரவு ஒன்றில் கையெழுத்திட்டார். அப்போது அவரே உயர்மட்ட தயாரிப்பு நிலையைப் பராமரிக்க என்று தெரிவித்தார். இந்த உத்தரவு வழக்கமானதாக அப்போது பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அதிகாரிகள் என்ன கூறுகிறார்கள் என்றால் சீனாவின் ஆண்டுப்பயிற்சி முறைகளில் பெரிய அளவில் மாற்றம் இருந்ததாகவும் சீனாவின் முன் நிலை படைக் குவிப்பு இந்தியாவுடன் மட்டுமல்ல ஜப்பான், தய்வான் மற்றும் தென்சீனக் கடல் பகுதியிலும் பதற்றத்தை அதிகரித்தன என்கின்றனர் அதிகாரிகள். அதிபர் ஜின்பிங்கின் பயிற்சிப் படைத் திரட்டல் உத்தரவில் போர் பயிற்சி மேற்கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிபரின் உத்தரவு குறைந்தது 2021 வரை நீடிக்கும் என்பதால் எல்லைப்பகுதியில் புதிய இந்த இயல்புக்கு தங்களை தயார்ப்படுத்தி வருகிறது. லே-யில் உள்ள 14 கார்ப்ஸ் படைகளுடன் கூடுதல் பிரிவையும் இதன் கீழ் நிலை நிறுத்த பரிசீலித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT