Published : 13 Jul 2020 06:57 AM
Last Updated : 13 Jul 2020 06:57 AM

ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்கள்; சட்டத் திருத்தம் செய்தது மத்திய அரசு: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

புதுடெல்லி

ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்கள் தொடர்பாக மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.

மோட்டார் வாகன சட்டத்தில் ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கக் கூடிய எம் மற்றும் என் வகை வாகனங்கள் தொடர்பாக சில திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளது. இதற்கான வரைவு ஒன்றை மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த வகை வாகனங்களின் தர நிர்ணயம் ஆட்டோமோடிவ் இண்டஸ்ட்ரி ஸ்டேண்டர்ட் எனப்படும் ஏஐஎஸ் 157:2020-ன் படி முடிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை வாகனங்களுக்கான ஸ்பெசிஃபிகேஷன் விவரங்கள் ஐஎஸ்ஓ 14687 ஆகியவற்றின்படி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை பிஐஎஸ் 2016-ன்படி இவற்றின் தரம் மற்றும் ஸ்பெசிஃபிகேஷன் விவரங்கள் நிர்ணயிக்கப்பட்டன. இதற்கான வரைவு ஜூலை 10-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. திருத்தம் செய்யப்பட்டுள்ள வரைவு குறித்து துறை சார்ந்தவர்களின் கருத்துகளையும் பொதுமக்களின் கருத்துகளையும் மத்திய சாலை போக்குவரத்து துறை கேட்டுள்ளது. இந்த வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து 30 நாட்களுக்குள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x