Published : 12 Jul 2020 08:57 PM
Last Updated : 12 Jul 2020 08:57 PM

கேரளாவில் இன்று 435 பேருக்கு புதிதாக கரோனா தொற்று: சுகாதார அமைச்சர் ஷைலஜா தகவல்

திருவனந்தபுரம்

கேரளாவில் இன்று கரோனா தொற்று புதியதாக கண்டறியப்பட்டவர்கள் 435 பேர், நோய்த் தொற்று கண்டறியப்பட்டவர்களில் 206 பேர் தொடர்பு மூலம் பாதிக்கப்பட்டவர்கள் என கேரள சுகாதார மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள அவரின் செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது.
பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 59 பேர், ஆலப்புழா மாவட்டத்தில் 57 பேர், காசர்கோடு மாவட்டத்தில் 56 பேர், எர்ணாகுளம் மாவட்டத்தில் 50 பேர், மலப்புரம் மாவட்டத்தில் 42 பேர், திருவனந்தபுரம் மாவட்டத்தில் 40 பேர், பத்தினம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 39 பேர் மற்றும் திருச்சூர் மற்றும் வயநாடு மாவட்டங்களில் தலா 19 பேர், கண்ணூர் மாவட்டத்தில் இருந்து 17 பேர், 16 பேர் இடுக்கி மாவட்டத்தில், கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர், கொல்லம் மாவட்டத்தில் 5 பேர், கோழிக்கோடு மாவட்டத்தில் 4 பேர் இன்று பரிசோதனையில் கரோனா பாஸி்ட்டிவ் வந்தவர்கள்.

திருச்சூர் மாவட்டத்தில் ஜூலை 5 ஆம் தேதி இறந்த வல்சலா (63) மற்றும் ஆலப்புழா மாவட்டத்தில் ஜூலை 7 ஆம் தேதி இறந்த பாபு (52) ஆகியோரின் மறு சோதனைகளின் முடிவுகளும் இன்றைய பாஸிட்டிவ் எண்ணிக்கையில் அடங்கும்.
எர்ணாகுளம் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் தலா 41 பேர், ஆலப்புழா மாவட்டத்தில் 35 பேர், திருவனந்தபுரம் மாவட்டத்தில் 31பேர், பதானம்திட்டா மாவட்டத்தில் 24 பேர், மலப்புரம் மாவட்டத்தில் 17 பேர், கோட்டயம் மாவட்டத்தில் 6 பேர், கொல்லம் மாவட்டத்தில் 5 பேர், கோழிக்கோடு மாவட்டத்தில் 4 பேர், திருச்சூர் மாவட்டம், இடுக்கி மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் தலா ஒன்று, மாவட்டங்களில் தொடர்பின் மூலம் தொற்று ஏற்பட்டவர்கள் ஆவர்.

ஆலப்புழா மாவட்டத்தில் நான்கு, திருவனந்தபுரம் மாவட்டத்தில் இரண்டு மற்றும் பதானம்திட்டா, கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் காசர்கோடு மாவட்டங்களில் தலா ஒரு சுகாதாரப் பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கண்ணூர் மாவட்டத்தில் ஒரு டி.எஸ்.சி ஊழியர் மற்றும் சி.ஐ.எஸ்.எஃப் பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சையிலிருந்து கரோனா நெகட்டிவ் சோதனை கிடைத்து குணமானவர்களின் மாவட்ட வாரியான புள்ளிவிவரங்கள்: பத்தானம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 24 நோயாளிகள், கண்ணூர் மாவட்டத்தில் 22, திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20, கோழிக்கோடு மாவட்டத்தில் 18, பாலக்காடு மாவட்டத்தில் 16, மலப்புரம் மாவட்டத்தில் 15, காசர்கோடு மாவட்டத்தில் 7, எர்ணாகுளம் மாவட்டத்தில் 5 நோயாளிகள். திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர், ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் தலா ஒருவர்.

இதுவரை, 4,097 பேர் கோவிட் குணமாகியுள்ளனர். மேலும் 3,743 நோயாளிகள் இன்னும் மாநிலத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 1,81,784 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 1,77,794 பேர் தங்கள் வீடுகளில் அல்லது நிறுவன தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் கண்காணிக்கப்படுகிறார்கள், 3,990 பேர் மருத்துவமனைகளில் தனிமையில் உள்ளனர். 633 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், நடத்தப்படும் சோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 13,478 மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. மொத்தம் 3,47,529 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன, அவற்றில் 5,944 மாதிரிகளின் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

சுகாதார ஊழியர்கள், விருந்தினர் தொழிலாளர்கள், சமூக தொடர்புகள் போன்ற முன்னுரிமை குழுக்களிடமிருந்து 76,075 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன, மேலும் 72,070 மாதிரிகள் எதிர்மறையாக இருந்தன.
இன்று, 30 புதிய இடங்கள் ஹாட்ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டன.

இவ்வாறு ஷைலஜா செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x