Published : 12 Jul 2020 06:55 PM
Last Updated : 12 Jul 2020 06:55 PM
கரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் சதவிகிதம் 62.93% ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
கோவிட்- 19 நோய்க்கு எதிராக “ஒட்டுமொத்த முழுமையான அரசு” அணுகுமுறையுடன், மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள்; நோயை முன்கூட்டியே அடையாளங்கண்டு, உரிய காலத்தில் நோயைக் கண்டறிந்தற்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர்களுக்குத் திறம்பட மருத்துவ சிகிச்சை அளிப்பது ஆகியவற்றின் காரணமாக கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் குணமடைந்தோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட 19235 பேர் குணமடைந்தனர். இதையடுத்து இதுவரை 5,34,620 கோவிட் நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
குணமடைவோர் சதவிகிதம் 62.93% ஆக அதிகரித்துள்ளது. அனைத்து வகையிலான முயற்சிகளின் காரணமாக, தற்போது நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை விட 2,42,362 பேர் நோயிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள். மொத்தம் 2 லட்சத்து 92 ஆயிரத்து 258 பேருக்கு கோவிட் 19 நோய் பாதிப்பு உள்ளது. இவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக தற்போதைய கட்டமைப்பில் கோவிட் நோய் சிகிச்சைக்காக மட்டும் அர்ப்பணிக்கப்பட்ட 1370 டிசிஹெச் மருத்துவமனைகள், கோவிட் நோய் சிகிச்சைக்காக மட்டும் அர்ப்பணிக்கப்பட்ட 3062 பொது சுகாதாரமையங்கள், 10334 கோவிட் நோய் அக்கறை மையங்கள் ஆகியவை உள்ளன.
இவை வெற்றிகரமாகச் செயல்படுவதற்காக, மத்திய அரசு, பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மத்திய அமைப்புகளுக்கு 122.36 லட்சம் தனிநபர் பாதுகாப்பு கவச உபகரணங்கள்; 223.33 லட்சம் என்-95 முகக்கவசங்கள் 21,685 செயற்கை சுவாசக் கருவிகள் ஆகியவற்றை வழங்கியுள்ளது.
கோவிட்-19 பரிசோதனைகளில் இருந்த தடைகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன. மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் பரிசோதனை அளவு அதிகரித்துள்ளது; எனவே, நாட்டில் கோவிட்-19 நோய்க்கு நாளொன்றுக்கு
மேற்கொள்ளப்படும் பரிசோதனை மாதிரிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 2,80,151 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம், ஒரு கோடியே 15லட்சத்து 87ஆயிரத்து 153 மாதிரிகள், பரிசோதிக்கப்பட்டுள்ளன.இதன் பயனாக, இதுவரை நாட்டில் ஒரு மில்லியன் மக்களில் பரிசோதனை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது, 8396.4 ஆக உள்ளது.
பரிசோதனை அளவு அதிகரித்துள்ளதற்கு முக்கிய காரணம், நாடு முழுவதுமுள்ள பரிசோதனை ஆய்வுக்கூடங்களை விரிவுபடுத்தியதேயாகும். தற்போது நாட்டில் 850 அரசு பரிசோதனை ஆய்வுக்கூடங்களும், 344 தனியார் ஆய்வுக்கூடங்களும் உள்ளன. மொத்தம் 1194 ஆய்வுக்கூடங்கள். இவை பின் வருமாறு:
ரியல் டைம் ஆர்டிபிசிஆர் அடிப்படையிலான பரிசோதனை ஆய்வுக்கூடங்கள் 624 (அரசு 388+ தனியார் 236 )
ட்ரூநாட்அடிப்படையிலான பரிசோதனை ஆய்வுக்கூடங்கள் 472 (அரசு 427தனியார் 45)
சி பி என் ஏ ஏ டி அடிப்படையிலான பரிசோதனை ஆய்வுக்கூடங்கள் 98 (அரசு 35 தனியார் 63)
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT