Published : 11 Jul 2020 08:30 AM
Last Updated : 11 Jul 2020 08:30 AM
கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதையடுத்து வெள்ளி இரவு 10 மணிமுதல் ஞாயிறு காலை 5 மணி வரை உத்தரப் பிரதேச மாநிலத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது முழு லாக்-டவுன் என்று உ.பி. அரசு கூற லக்னோ போலீஸ் கமிஷனர் சுஜீத் பாண்டேயோ இது லாக் டவுன் அல்ல என்கிறார்.
“இது லாக்-டவுன் அல்ல, சில நோக்கங்களுக்காக இடப்பட்டுள்ள சில கட்டுப்பாடுகளே. நாங்கள் உத்தரவை அமல்படுத்துகிறோம். நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம். இதனை தினசரியே செய்து வருகிறோம். ஆனால் இந்த 3 நாட்களுக்கு இன்னும் கூடுதல் விழிப்புடன் செயல்படுவோம்”
ஏற்கெனவே உ.பி. போலீஸ் கதை அனைவருக்கும் தெரியும் நிலையில் புதிய லாக் டவுன் உத்தரவினால் பொதுமக்களிடம் போலீஸார் எப்படி நடந்து கொள்ளப் போகிறார்களோ என்று அங்கு சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் மதவழிபாட்டுத் தலங்களுக்குத் தடையில்லை என்று தெரிகிறது.
உ.பி.யில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,024 ஆக இருக்கிறது, பலி எண்ணிக்கை 889 ஆக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT