Published : 11 Jul 2020 08:11 AM
Last Updated : 11 Jul 2020 08:11 AM
எல்லை பிரச்சினை தொடர்பாக, ராணுவ தளபதிகள் நிலையில் சீனா, இந்தியா இடையே அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், கிழக்கு லடாக்கில் மோதல் நடந்த பாங்கோங் ஏரி பகுதியில் இருந்தும் தமது படைகளை வாபஸ் பெற்றுள்ளது சீனா.
பாங்கோங் ஏரியின் வட கரையில் ஃபிங்கர் 4 பகுதியின் கிழக்கு முகமாக ஃபிங்கர் 5 பகுதி வரையில் அடிவாரத்திலிருந்து முழுமையாக தமது படை வீரர்களையும் ராணுவ வாகனங் களையும் சீனா விலக்கிக் கொண்டுள்ளது. கடந்த மாதம் 30-ம் தேதி நடந்த ராணுவ தளபதிகள் சந்திப்பில் ஒப்புக்கொண்டபடி சீனாவின் நடவடிக்கை அமைந் துள்ளது என அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
ஃபிங்கர் 4 பகுதியின் கணிசமான நீள்பரப்புகளிலிருந்து சீனா தமது படை வீரர்களை விலக்கிக்கொள்ளாமல் இருந் தாலும் அடிவாரப் பகுதிகளில் இருந்து வாபஸ் பெற்றுள்ளது. 14 கார்ப்ஸ் தளபதி லெப்டி னன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் மற்றும் சீனாவின் தெற்கு ஜின்ஜி யாங் ராணுவ மாவட்ட தலைவர் மேஜர் ஜெனரல் லியூ லின் ஆகி யோர் முன்பு நடத்திய பேச்சுவார்த் தையில் முடிவு செய்த பதற்றம் குறைப்பு திட்டத்தின் முதல் கட்டத்தை முழுமைப்படுத்தும் நல்ல அறிகுறியாக இது கருதப்படு கிறது. இந்நிலையில், ஃபிங்கர் 5 லிருந்து 8 பகுதி வரையில் தமது படைகளை சீனா நிலைநிறுத்தி வைத்துள்ளது.
ஃபிங்கர் 4 பகுதியில் மலைமுகடுகளிலிருந்து சீனா தமது படைகளை விலக்கிக்கொள்கிறதா என்பதை 4 நாள் வரை காத்திருந்து கண்காணிக்க வேண்டியுள்ளது. இந்தப் பிரச்சினை அடுத்த வாரம் நடக்கும் பேச்சுவார்த்தையில் எழுப்பப்பட உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஃபிங்கர் 2 மற்றும் 3 பகுதிக்கு இடையே மேற்கு புறமாக தமது தன் சிங் தபா சாவடி நோக்கி இந்தியாவும் தகுந்த தொலைவுக்கு தமது படை வீரர்களை பின்னோக்கி நகர்த்தியுள்ளது.
கடந்த சில தினங்களாக இருநாட்டு ராணுவமும் கல்வான் பள்ளத்தாக்கில் ரோந்து முனை 14 15 மற்றும் கோக்ரா- ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் ரோந்து முனை 15, 17ஏ ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 1.5 கி.மீ. முதல் 2 கி.மீ. தொலைவு வரை தமது படைகளை பின்னோக்கி நகர்த்தியுள்ளன.
கடந்த மாதம் 6, 22, 30 ஆகிய தேதிகளில் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அடுத்த வாரம் நடக்கும் பேச்சு வார்த்தையில் மோதல் நடந்த 4 பகுதிகளையொட்டி குவித்துள்ள ஆயுதங்கள், வாகனங்களை காலக்கெடு நிர்ணயித்து வாபஸ் பெறுவதற்கான வழிமுறைகள் விவாதிக்கப்படும். டெப்சாங் சமவெளி பகுதியில் ரோந்து செல்லும் இந்திய வீரர்களை சீனா தடுப்பது பற்றியும் லெப்டினன்ட் சிங் பேச்சுவார்த் தையில் எழுப்புவார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT