Published : 10 Jul 2020 08:12 AM
Last Updated : 10 Jul 2020 08:12 AM
ஏற்கெனவே ரயில்வே துறையால் இயக்கப்படும் ரயில்களுடன் கூடுதலாக 151 ரயில்களை தனியார் துறை பங்களிப்புடன் இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ரயில் சேவையை அதிகரிக்கவும் பயணிகளுக்கு வசதியை மேம்படுத்தும் வகையிலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
தனியாரை அனுமதிக்கும் இந்த திட்டம் மூலம் ரயில்வே துறையில் ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு தனியார் துறை முதலீடுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் 109 வழித் தடங்களில், தனியார் மூலம் 151 நவீன ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதுடன், ஒவ்வொரு ரயிலிலும் 16 பெட்டிகள் இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ள இந்த ரயில் பெட்டிகளுக்கு தேவையான நிதி, கொள்முதல், பராமரிப்பு மற்றும் இயக்கம் தொடர்பான பணிகளை தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ள உள்ளன.
மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட உள்ளதால், பயண நேரமும் வெகுவாக குறையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT