Published : 10 Jul 2020 08:05 AM
Last Updated : 10 Jul 2020 08:05 AM
லடாக் எல்லை நிலவரம் குறித்து அங்கு பணியாற்றி ஓய்வு பெற்ற சுபேதார் மேஜர் சோனம் முரூப் கூறியதாவது:
கடந்த 1962 போரின் போது சில பின்னடை வுகள் இருந்ததால் நமது நிலத்தை இழந் தோம். ஆனால் இப்போது இந்திய ராணுவம், விமானப் படை, கடற்படை முழு பலத்துடன் உள்ளன. ஆயுத பலமும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.
ஆரம்ப காலத்தில் எல்லைப் பகுதிக்கு செல்ல சாலை வசதி கிடையாது. நடந்தேதான் செல்வோம். எல்லைப் பகுதியை அடைய 18 நாட்கள் ஆகும். இப்போது நிலைமை மாறிவிட் டது. பளிங்கு போல அமைக்கப்பட்டுள்ள சாலை யில் 24 மணி நேரத்தில் எல்லை பகுதியை சென் றடைய முடியும். இதுதான் சீனாவின் எரிச்ச லுக்கு காரணம். எல்லையில் பணியாற்றும் லடாக் ஸ்கவுட் படைப் பிரிவு, பனிப் போர் வீரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களை தாண்டி சீன வீரர்களால், இந்திய எல்லைக்குள் நுழைய முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் எல்லையில் நிலவரம் மேம்பட்டுள்ளது. விரைவில் இருதரப்பும் பேச்சுவார்த்தையை தொடரும் என்று சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஜா லிஜியான் நேற்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT